அந்த கேரக்டர் பண்ணினது தப்பு என இதுவரை புலம்பும் 5 நடிகைகள்.. நயன்தாரா வெறுத்து ஒதுக்கிய படம்

Kollywood Actresses took negative role in tamil films: “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு” என்று கூறிய அறிஞன் அவளின் நெஞ்சில் இருக்கும் விஷமத்தை கூற மறந்து விட்டான் போல. அமைதியான பெண்ணின் பின்னால் இருக்கும் ஆக்ரோஷத்தை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட படங்களில் நம் நடிகைகள் சிலர் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர் அந்த படங்கள் அவர்களுக்கு கை கொடுக்காமல் போனது அவர்கள் துரதிஷ்டம்

பச்சைக்கிளி முத்துச்சரம்: பொன்மானாக வந்து நாயகியை பிரித்து அமைதியான குடும்பத் தலைவனின் வாழ்க்கையில் புயலை வீசிவிட்டு போன இந்த பச்சைக்கிளி ஜோதிகா அவர்கள் தான்.  மிரட்டும் வில்லதனத்தில் நாயகனுடன் ஆக்ரோஷமாக ஆக்ஷனில் இறங்கிய ஜோதிகாவை நம்ம ஜோவா இது? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். இதற்குப் பின் இந்த மாதிரி வில்லத்தனத்தை ஜோதிகா கையில் எடுக்காதது நன்மைக்கே.

வல்லவன்: என்ன லவ் பண்றல்ல? என்ன லவ் பண்றல்ல? ஓயாது கூறி சிம்புவை துரத்தி அடித்த ரீமாசென், மிரட்டும் விழிகளோடு வில்லத்தனத்தை தெறிக்க விட்டார். அதுவரை ரொமாண்டிக் ஹீரோயினாக கண்டுகளித்த ரசிகர்கள் இவரின் இந்த வில்லத்தனத்தில் அதிர்ச்சி அடைந்தனர் எனலாம். இதன் பின் ரீமாசெனிற்கு காதல் பட வாய்ப்புகள் குறைந்தது.

Also read: அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

பார்த்தேன் ரசித்தேன்: 2000 ல் வெளிவந்த இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், லைலா, ராகவா லாரன்ஸ் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்ரன் கேரக்டருக்கு முதலில் ரம்பாவை தான் அணுகினார்களாம். டூயட் இல்லை வில்லி ரோல் என்று ஒதுங்கி விட்டாராம் ரம்பா.  ஹீரோயின் ஆக உச்சத்தில் இருந்த போதும் சிம்ரன் துணிச்சலாக இக்கதையை தேர்ந்தெடுத்தது அவருடைய கேரியரில் சற்று சரிவை ஏற்படுத்தியது.

பத்து என்றதுக்குள்ள: விக்ரம் சமந்தா நடிப்பில் வெளிவந்த பத்து என்றதுக்குள்ள படத்தில் சமந்தா இரு வேடங்களில் நடித்திருந்தார்.  முதல் பாதியில் காமெடிகள் தெறிக்கவிடும் வெகுளி பெண்ணாகவும் இரண்டாம் பாதியில் நார்த் இந்தியன் ஸ்டைலில் வில்லியாகவும் வந்து ரசிகர்கள் மனதில் ஒட்டாமல் போய்விட்டார் சமந்தா.

கஜினி: இப்படத்தைப் பற்றி பேசினாலே டென்ஷன் ஆகிவிடுகிறார் நயன்தாரா. ஏன் என்றால் இயக்குனர் இவரிடம் ஒரு கதை சொல்லிவிட்டு பின் படத்தில் கதாபாத்திரத்தை வேறு விதமாக மாற்றி விட்டார் என்று ஒரே புலம்பல். இந்த படம் தந்த அனுபவத்தினாலேயே ஒவ்வொரு படத்தின் கதையையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.

Also read: நயன்தாராவிற்கு அப்பாவாக நடிக்கும் அரசியல் புலி.. குடும்பச் சண்டையில் பிரதீப்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்