நயன்தாராவிற்கு அப்பாவாக நடிக்கும் அரசியல் புலி.. குடும்பச் சண்டையில் பிரதீப்

Vignesh shivan and nayanthara teamup pradeep for LIC: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி செட்டி, நயன்தாரா, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சுருக்கமாக எல்ஐசி.

காதல், காமெடி, சென்டிமென்ட் என விக்னேஷ் சிவனுக்கே உரித்தான கலவையான கதையில் தயாராகி வருகிறது இந்த எல் ஐ சி. படத்திற்கான பூஜை போடப்பட்டதிலிருந்தே படத்தின் பிரமோஷனில் இறங்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

படத்தின் டைட்டில் முதற்கொண்டு அடுத்தவரிடம் இருந்து சுட்டு வைத்துள்ளார் விக்னேஷ்.  படத்தின் டைட்டிலை மாற்றும்படி இயக்குனர் எஸ் எஸ் குமரன் வேண்டுகோள் விடுத்தும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியும் இருந்தார். எதையும் கண்டு கொள்வதாக இல்லை இந்த படக்குழு.

Also read: பிரதீப்பின் 3 படங்கள் திருட்டுப் படமா?. மாட்டிக்கொண்டு முழிக்கும் விக்னேஷ் சிவன்

அடுத்ததாக பிரதீப்பின் அக்காவாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று பிரமோஷன் செய்யப்பட்டது.  என்னது அக்காவா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் பிரதீப்பிற்காக ஏற்றுக் கொண்டனர்.

பிரமோஷன் பத்தல பத்தல என்று அடுத்து சீமான் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்க போகிறார் என்று அதிரடி காட்டியுள்ளனர். ஆம்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனல் தெறிக்கும் பேச்சாளர் சீமான் அவர்களை விவசாயி  கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் பிரதீப்பின் அப்பாவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு முன் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி செய்தியாளர்கள் சீமானிடம் கேட்ட கேள்விக்கு வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கப்பா என்று புறந்தள்ளியவர் இன்று அவர்கள் கூட்டணியில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சீமான் கூறியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Also read: நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை