விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் கீர்த்தி சுரேஷ்.. உதயநிதியால் ஏமாந்த பரிதாபம்

Actress Keerthi Suresh: பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினால் ஏமாற்றம் அடைந்து காரணத்தைப் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

மலையாள படங்களில் அறிமுகமாகி அதன்பின் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் பெரிதும் பேசப்பட்ட ஹீரோயின் தான் கீர்த்தி சுரேஷ். மேலும் ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

Also Read: முதல் படத்திலேயே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. ஆடியன்ஸ்களை மிரள வைத்த போர் தொழில்

அதைத்தொடர்ந்து சாணிக் காகிதம் என்னும் படத்தில் இவர் ஏற்ற மாறுபட்ட கதாபாத்திரம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், அதன்பின் எந்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட்டில் பின்தங்கி காணப்பட்டார்.

இந்நிலையில் உதயநிதியின் சிபாரிசில் மாமன்னன் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க, இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளிவந்த படம் தான் மாமன்னன். இப்படம் பல எதிர்பார்ப்புகளை முன் வைக்கும் விதமாக சமீபத்தில் திரையில் வெளியாகி உள்ளது.

Also Read: வெறும் அட்ஜஸ்ட்மெண்டால் பட வாய்ப்பை இழந்த பிக்பாஸ் நடிகை.. ஓபனாக பேசிய பயில்வான்

அவ்வாறு வாய்ப்பு இழந்த கீர்த்தி சுரேஷ் இப்படம் மூலம் நாம் மீண்டு எழுந்து விடலாம் என்று நினைப்பில் இருந்தார். அதில் மண்ணை வாரி போட்ட விதமாய் இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்படவில்லை. படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எடுபடவில்லை.

ஒரு வருடத்திற்கு மேல் தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ், உதயநிதி கொடுத்த வாய்ப்பால் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். இருப்பினும் மாமன்னனில் இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி என்ற முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

Also Read: அரவிந்த்சாமியின் தந்தை பிரபல சீரியல் நடிகரா? நிறத்தில் அப்பாவை உரித்து வைத்திருக்கும் மகன்

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -