அரவிந்த்சாமியின் தந்தை பிரபல சீரியல் நடிகரா? நிறத்தில் அப்பாவை உரித்து வைத்திருக்கும் மகன்

Aravindsamy: ஒரு காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு இருந்து வந்தது. பெரும்பாலும் மணிரத்தினம் படத்தின் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்து வந்தார். அதுமட்டுமின்றி அரவிந்த்சாமி போல மாப்பிள்ளை வரவேண்டும் என பெண்கள் விரும்பினார்கள்.

அந்த அளவுக்கு சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்கு கலராக இருக்கக்கூடியவர். இந்நிலையில் அரவிந்த்சாமியின் தந்தையும் சினிமாவில் பிரபல நடிகர் என்பது பலரும் அறியாத விஷயம். அதுமட்டுமின்றி சின்னத்திரை தொடர்களில் அவரது அப்பா ஒரு காலகட்டத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்.

Also Read : 53 வயதாகும் அரவிந்த்சாமியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. சினிமா, பிசினஸ் என ரவுண்டு கட்டும் சாக்லேட் பாய்

அதாவது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் டெல்லி குமார். அதுவும் மெட்டிஒலி, ஆனந்தம் போன்ற பிரபல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் டெல்லி குமார் நடித்திருந்தார். இலையில் டெல்லி குமாரை போலவே நிறத்தில் அரவிந்த்சாமி அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அரவிந்த்சாமிக்கு தனது அப்பா மீது மிகுந்த பயம் உள்ளதாம். சிறுவயதிலிருந்தே தனது மாமா வீட்டில் தான் அரவிந்த்சாமி வளர்ந்துள்ளார். மேலும் ரோஜா படத்தில் நடித்த போது தனது அப்பாவுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார்.

Also Read : ஓவர் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரவிந்த்சாமி

அந்த சமயத்தில் பயத்துடன் அமர்ந்திருந்த அரவிந்த்சாமி ரோஜா படத்தில் இடம் பெற்ற புது வெள்ளை மழை என்ற பாடல் வரும்போது பாத்ரூம் போயிட்டு வரேன் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு போய்விட்டாராம். அந்த பாட்டு முடிந்த பிறகு தான் மீண்டும் தியேட்டருக்குள்ளேயே வந்தாராம்.

அப்படி தந்தைக்கு பயந்து நடித்த அரவிந்த்சாமி இப்போது சித்தார்த் அபிமன்யு போன்ற வில்லன் கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். இப்போதும் அரவிந்த் சாமிக்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

aravidsamy-father-delhi-kumar
aravindsamy-father-delhi-kumar

Also Read : சாஃப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடல் எடுக்கும் 5 நடிகர்கள்.. பிள்ளையார் சுழி போட்ட அரவிந்த்சாமி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்