விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. சிறுவன் கையில் பற்றிய தீ, தலைவலியில் விஜய்

Vijay: கள்ளக்குறிச்சி சம்பவத்தால் தமிழ்நாடே இப்போது பதற்றமாக இருக்கிறது. அதன் காரணமாகவே விஜய் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து உள்ளார்.

ஆனாலும் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதே சமயத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் ஒரு பக்கம் இதை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவத்தால் விஜய் மிகுந்த டென்ஷனில் இருக்கிறாராம். அதாவது நீலாங்கரையில் தளபதியின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அதில் ஒரு சிறுவனை வைத்து அவர்கள் நடத்திய சாகச நிகழ்வு தான் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அதாவது சிறுவனின் கையில் நெருப்பை பற்ற வைத்து அதன் மூலம் ஓடுகளை உடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விபரீதமான பிறந்தநாள் கொண்டாட்டம்

அப்போது அந்த சிறுவன் ஓடுகளை உடைத்த பிறகும் கையில் இருந்த நெருப்பு அணையாமல் எரிந்தது. இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக சிறுவன் கையில் பெட்ரோல் பட்டு நெருப்பு அதிகமாக எரிய ஆரம்பித்துவிட்டது.

அதன் பிறகு எப்படியோ தீ அணைக்கப்பட்டு வலியால் கதறிய சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தற்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியும் கூட கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பில்லாமல் இப்படி ஒரு விபரீதத்தில் இறங்கி இருக்கின்றனர். இது தற்போது விஜய்யின் கவனத்திற்கு வந்த நிலையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

விஜய் பிறந்தநாளில் ஏற்பட்ட அசம்பாவிதம்

Next Story

- Advertisement -