பெரியப்பா செய்யப் போகும் சூழ்ச்சியால் எழிலுடன் நடக்கும் கயல் திருமணம்.. ஏமாறும் சிவசங்கரி கல்யாணத்தில் நடக்கும் ட்விஸ்ட்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், எழிலின் அம்மா சிவசங்கரி போட்ட பிளான் படி கயல் மாட்டிக் கொண்டார். அதாவது எழிலின் உண்மையான ஜாதகத்திற்கு பதிலாக பொய்யான ஜாதகத்தை ரெடி பண்ணி கயல் அம்மாவிடம் கொடுத்து இருந்தார். அதை எடுத்துட்டு போய் ஜாதகம் பார்த்த சூழ்நிலையில் தான் கயலுடன் எழிலுக்கு திருமணம் நடக்கக்கூடாது என்பது போல் ஜோசியரின் மனைவி கயலிடம் சொல்லிவிட்டார்.

உடனே கயல், காதலை விட எழிலின் உயிர் தான் ரொம்ப முக்கியம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். அந்த சூழ்நிலையில் சிவசங்கரின் உண்மையான சுயரூபம் தெரிந்த நிலையில் நான் எழிலை விட்டு பிரிகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார். அதன்படி சிவசங்கரி இப்பொழுது எதுவுமே வீட்டில் சொல்ல வேண்டாம். பிளான் பண்ணியபடி உன்னுடைய கல்யாண வேலைகள் அனைத்தும் நடக்கட்டும்.

மகனின் கல்யாணத்தில் ஏமாறப்போகும் சிவசங்கரி

அதே மாதிரி கல்யாணத்து அன்றைக்கு முகூர்த்த நேரத்தில் நீ அங்கிருந்து போய் விடு. அதன் பிறகு நான் எழில் மனதை எப்படியாவது மாற்றி எனக்கு பிடித்த தீபிகாவுடன் கல்யாணத்தை பண்ணி வைத்து விடுகிறேன் என்று கயலிடம் ஒப்பந்தம் போட்டு விட்டார். அதன்படி கயல் இந்த ஒரு விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல், எனக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்காது என்பதையும் மறைத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களிடம் நடித்து வருகிறார்.

இது தெரியாத எழில், கயலை கண்மூடித்தனமாக நம்புகிறார். ஆனால் கயலின் நடவடிக்கையில் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கிறது. அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதையும் எழில் புரிந்து கொள்கிறார். இந்த சூழலில் தீபிகா, கயலுக்கு போன் பண்ணி எழிலை பற்றி தெரிந்து கொள்கிறார். அத்துடன் அங்கு வந்த எழிலை சந்தித்து தீபிகா பேசி சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து கயல் மற்றும் எழிலின் கல்யாணம் நடக்காது என்பது போல் தீபிகா மற்றும் சிவசங்கரி முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால் கயல் திருமணத்தில் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனை ஏற்பட போகிறது. அதுவும் கயல் குடும்பத்தையும் கயலையும் குட்டிச் சுவராக்கி அவமானப்படுத்தி நடுத்தெருவில் நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் பெரியப்பா மூலம் நல்லது நடக்கப் போகிறது.

பெரியப்பா, மூர்த்தியை செண்டிமெண்டாக பேசி லாக் பண்ணி கயல் கல்யாணத்துக்கு தேவையான பணத்தை கொடுத்து மொத்த குடும்பத்தையும் அடிமையாக்க நினைக்கிறார். அதன் படி போட்ட பிளானில் ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறார். அதே மாதிரி கயலுக்கும், பணக்கார வீட்டு பையனாக இருக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்கக்கூடாது என்று சூழ்ச்சி பண்ணுகிறார்.

ஆனால் பெரியப்பா போட்ட சூழ்ச்சி கடைசியில் அவருக்கே ஒரு ஆபத்தாக முடியும் நிலையில் கயலுக்கு ஒரு நல்லது நடக்கப் போகிறது. அந்த நல்ல ஒரு விஷயம் என்னவென்றால் கயல் மற்றும் எழிலின் திருமணம் தான். பொதுவாக நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்று சொல்வார்கள். அது போல தான் பெரியப்பாவின் சூழ்ச்சி கயலுக்கு நல்லதாக முடியப்போகிறது. அந்த வகையில் இந்த கல்யாணத்தில் தீபிகா மற்றும் சிவசங்கரி ஏமாந்து போய் நிற்கப் போகிறார்கள்.

கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -