ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

5வது படத்திலேயே கவினுக்கு இரண்டு ஹீரோயின்கள்.. பொறாமையில் பொங்கிய இளம் ஹீரோக்கள்

Actor Kavin: விஜய் டிவியின் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். இந்த சூழலில் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

அந்த வகையில் லிப்ட் மற்றும் டாடா படங்கள் ஏக போக வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக தனது 5வது படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். எலன் இயக்கும் இந்த படத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு கவின் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Also Read : லாஸ்லியாவுக்கும் கவினின் வருங்கால மனைவிக்கும் இப்படி ஒரு தொடர்பா.? சந்தேகத்தை தீர்த்து புகைப்படம்

மேலும் சமீபத்தில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. அதாவது தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை இந்த மாதம் இறுதியில் கவின் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இந்நிலையில் கவின் படத்தைப் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

எலன் இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். அதோடு மட்டுமல்லாமல் கவின் தனது 5வது படத்திலேயே இரண்டு கதாநாயகிகளுடன் நடிக்க இருக்கிறாராம். அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகிகள் கவினுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள்.

Also Read : அங்க இங்கனு தேடி கடைசியில கவினின் வருங்கால மனைவி புகைப்படம் வைரல்.. செம்மையான ஜோடி பொருத்தம்!

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இவானா. அதேபோல் மிகவும் துணிச்சல் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் திவ்யபாரதி. இவர்கள் இருவரும் தான் கவினுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் மிக விரைவில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட பத்து நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாம். எனவே அடுத்த கட்டபடப்பிடிப்பில் தான் கதாநாயகிகளுக்கான காட்சி படமாக்கப்பட உள்ளது. எனவே சினிமாவில் கவின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதை அறிந்து இளம் ஹீரோக்கள் பொறாமையில் உள்ளனர்.

Also Read : திருமண நாளை லாக் செய்த டாடா கவின்.. பொண்டாட்டியாக போறவங்க இவங்கதான்

- Advertisement -

Trending News