புதன்கிழமை, நவம்பர் 6, 2024

உயிருக்கு போராடும் நிலையில் கதிர்.. ரத்தம் கொடுக்கப் போகும் குணசேகரனின் எதிரி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் பழைய மாதிரி கதை சுவாரஸ்யமாக இல்லை என்றாலும் இந்த நாடகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சிலர் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கதிருக்கு சரியான தர்ம அடி விழுந்துவிட்டது. கொஞ்ச நெஞ்சமா ஆட்டம் ஆடி இருக்கிறார், எல்லாத்தையும் ஆட்டிப் படைக்கும் அளவிற்கு வன்மத்தை கொட்டியிருக்கிறார்.

அதனாலயே என்னமோ கதிர் அடிபட்ட பிறகும் யாருக்கும் பரிதாபமே வரவில்லை. நந்தினிக்கு கட்டின புருஷன் என்கிற ஒரு செண்டிமெண்ட் இருக்கிறதால் அவரே அறியாமல் கண்ணீர் விட்டு அழுது பரிதவித்து நிற்கிறார். இதுல வேற மாமியார்,  நந்தினியை வார்த்தையாலே திட்டி தீர்க்கிறார். என்னமோ நந்தினி தான் கதிருக்கு இந்த மாதிரி ஆனதற்கு காரணம் என்கிற மாதிரி குணசேகரின் அம்மாவின் பேச்சு அடாவடியாக இருந்தது.

முக்கியமாக பார்ப்பவர்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு நந்தினியை வஞ்சகமாக பேசுகிறார். ஆரம்பத்தில் வெறிகொண்டு இருந்த நந்தினி, கடைசியில் மாமியாருக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக கதிர் பண்ணின எல்லா தப்புக்கும் தான் இப்பொழுது அனுபவிக்கிறார். இதுல பொண்டாட்டி பிள்ளைகள் என்கிற எண்ணம் கூட கொஞ்சம் இல்லாமல் அடிமை மாதிரி நடத்திருக்கிறார்.

Also read: முத்து மீனாவைப் பிரிக்க மாமியாருடன் சேர்ந்து திட்டம் போடும் சுருதி.. பலிகடாக மாட்ட போகும் வெத்துவேட்டு

இப்படி இருந்த உங்க பையனிடம் எங்களுக்கு எப்படி பாசம் வரும் என்று மாமியாரிடம் நந்தினி கேட்கிறார். அடுத்து டாக்டர் வெளியே வந்ததும் குடும்பத்தில் இருப்பவர்கள் கதிரின் நிலைமை பற்றி விசாரிக்கிறார்கள். அதற்கு டாக்டர் அவர் அடிபடுவதற்கு முந்தைய நாள் ஆல்கஹால் எடுத்ததால் நாங்கள் கொடுக்கும் எந்த மருந்தும் உடம்புக்கு எடுத்துக்க மாட்டேங்குது.

இனி அவர் பிழைக்கிறது ரொம்பவே கஷ்டம் என்கிற மாதிரி டாக்டர் கூறிவிட்டார். ஆனால் இதன் பிறகு என்ன நடக்கும் என்றால் கதிரின் உடம்பில் இருக்கும் கெட்ட ரத்தங்கள் அனைத்தையும் வெளியேற்றி அவருக்கு ரத்தம் யாராவது கொடுத்தால் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கும் என்கிற மாதிரி அமையும். இப்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ரத்தம் கொடுப்பதற்கு ஏதுவாக இருப்பது குணசேகரனின் பரம எதிரியாக இருக்கும் ஜனனி.

அந்த வகையில் கதிர் உயிர் பிழைப்பதற்கு ஜனனி முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். அதே மாதிரி கதிருக்கு கை கால் அடிபட்டு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அப்பொழுது இவருக்கு பக்கபலமாக இருந்து அனைத்து உதவிகளும் பார்த்து சப்போர்ட்டாக இருப்பது நந்தினியாக தான் இருக்கும். ஆக மொத்தத்தில் இந்த ஒரு சான்ஸ் அனைத்தும் கதிர் திருந்துவதற்காக தான் கதை மாறப்போகிறது.

Also read: பாக்யாவின் கேன்டியனுக்கு புதிதாக வந்த பிரச்சனை.. ரணகளத்திலும் குதூகலமாக ஆட்டம் போடும் கோபி அங்கிள்

- Advertisement -spot_img

Trending News