ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனை விட டபுள் மடங்கு மிஞ்சிய கதிர்.. திருப்பி அடிக்கும் ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரும் தவறாமல் பார்த்து வரும் தொடராக இருக்கிறது. இதில் இருக்கிற மிகப்பெரிய பிளஸ் எந்த அளவுக்கு சீரியஸாக கதைகள் அமைகிறதோ அதே மாதிரி காமெடிக்கும் பஞ்சமில்லை என்று சொல்லலாம். இதற்கு இடையில் அவ்வப்போது ஜனனி மற்றும் சக்தியின் ரொமான்ஸ் சீன் இன்னும் பார்க்க தூண்டுகிறது. ஒரே ஒரு எரிச்சல் என்றால் அது ஆதிரையின் திருமண கதை தான்.

தற்போது எபிசோடுகளில் குணசேகரன் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அதனால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறையுது என்று தெரிந்ததும் இவரை மிஞ்சும் அளவிற்கு டபுள் மடங்காக கதிர் துள்ளிக் கொண்டு வருகிறார். ஏனென்றால் அப்பதான் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் தான். ஜனனி ஏதோ குணசேகருக்கு எதிராக பிளான் போடுகிறார் என்று சந்தேகப்பட்ட கதிர், யாரும் இல்லாத நேரத்தில் அவருடைய ரூமுக்கு சென்று ஜனனியின் போனை செக் பண்ணுகிறார்.

Also read: பசங்களால் தொடர்ந்து அவமானப்படும் கோபி.. எரிமலை மாதிரி வெடிக்காமல் மக்கு மாதிரி இருக்கும் பாக்கியா

பிறகு அங்க வந்த ரேணுகா நீ இங்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற உனக்கு வெக்கமா இல்லையா என்று கேட்க, அதற்கு கதிர் இது என்னுடைய வீடு நான் எங்க வேணாலும் வருவேன் இது அப்பத்தா இருந்த ரூம் நான் வந்து பார்க்க எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்கிறார். உடனே ஜனனியும் வந்து உனக்கு அறிவு இல்லையாடா என்னுடைய பொருளை என் அனுமதியில்லாமல் எடுக்கிற என்று கேட்கிறார்.

அதற்கு கதிர் மரியாதை இல்லாம வாடா போடா என்று பேசினால் அவ்வளவு தான் உன்னை வச்சு பார்க்க மாட்டேன் என்று சொல்கிறார். இதை தட்டிக்கிட்ட ரேணுகாவிற்கு கிடைத்த பரிசு அவமானம் தான். ரேணுகாவை உங்க அம்மா ஊசி போட்டு உன் உடம்பை வளர்த்துட்டு நீ எல்லாம் நடு வீட்ல வந்து பேசிகிட்டு இருக்க. உனக்கு எந்த தகுதியுமே இல்லை என்று வாய்க்கு வந்தபடி அராஜகமாக பேசுகிறார்.

Also read: குணசேகரனின் ட்ரிக்கே ஃபாலோ செய்யும் ஜனனி.. விறுவிறுப்பான ட்விஸ்ட்டுடன் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

அதோடு விடாமல் ஞானத்தையும் தரை குறைவாக பேசுகிறார். இதை பார்த்து ஏண்டா இப்படி பேசுகிறாய் என்று கேட்ட ஞானத்துக்கு கதிர் கொடுத்த பதிலடி கன்னத்தில் ஒரு ஓங்கி அரை விட்டான். என்னதான் இருந்தாலும் ஒரு அண்ணனும் மரியாதை இல்லாமல் கதிர் இந்த அட்டூழியம் பண்ணுவது பார்க்கிற நமக்கு அந்த அளவுக்கு கோபம் வருகிறது. குணசேகரன் என்னதான் வில்லத்தனமாக இருந்தாலும் இதுவரை யாரையும் கைநீட்டி அடிக்கிற பழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. அந்த விதத்தில் கதிரை விட இவர் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

இப்படி ஞானம் மற்றும் ரேணுகா கதிரால் அவமானப்பட்டு இருப்பதால், கதிருக்கு சரியான பாடத்தை கொடுக்க வேண்டும் என்று ஜனனி அவரை திருப்பி அடித்து எழுந்திருக்கவே முடியாத வகையில் அவரின் கொட்டத்தை அடக்கி விடணும் என்று நினைக்கிறார். ரொம்பவே ஓவராக தான் துள்ளிக்கிட்டு இருக்கிறார் மல்லு வேட்டி மைனர் கதிர். இவனுக்கும் கூடிய சீக்கிரத்தில் ஆப்பு குணசேகரன் மூலமாக தயாராகி வருகிறது. பார்க்கலாம் அப்பொழுது இவன் திருந்துறானா என்று.

Also read: குணசேகரனுக்கு எதிராக எதிர்நீச்சல் போட தயாராகும் ஜனனி.. ஏமாறப்போகும் ஜான்சிராணி

- Advertisement -

Trending News