வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குணசேகரனை புரட்டி எடுக்க பக்கா பிளான் போடும் ஜீவானந்தம்.. தம்பியை கைகழுவி விட்ட பரிதாபம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் சொத்து விஷயத்தில் மட்டும் தோற்றுப் போகவில்லை. அவருடைய திமிரு, ஆணவத்தையும் ஒட்டுமொத்தமாக கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகிட்டு வருகிறார். அந்த வகையில் இவரை எதிர்த்து இவர் வீட்டில் இருக்கும் பெண்கள் துணிந்து பேசியதோடு மட்டுமல்லாமல் எது நடந்தாலும் பரவாயில்லை ஒரு கை பார்த்திடலாம் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

அந்த வகையில் அப்பத்தாவிற்கும், ஜீவானந்தத்திற்கும் சப்போர்ட்டாக இருப்பதற்கு தயாராகி விட்டார்கள். மேலும் அப்பத்தாவை நேரில் பார்த்து எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்பதையும் பேசுவதற்காக ஜீவானந்தம் வீட்டிற்கு போகிறார்கள்.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

போகும் வழியில் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் காரணம் என்ற உண்மையை இப்போதைக்கு யாரும் சொல்ல வேண்டாம் என்று ஜனனி சொல்லிவிட்டார். அடுத்தபடியாக குணசேகரன் வீட்டிற்கு வளவன் நேரடியாக பேச வந்து விடுகிறார். அப்பொழுது வழக்கம்போல் கதிருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து விடுகிறது.

இவர்களை சரி செய்து குணசேகரன், வளவனிடம் உனக்கு தேவையான பணத்தை நான் கொடுத்திடுவேன் அதற்காக வீடு தேடி எல்லாம் வர வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு வளவன் அது எப்படி வாங்கணும் என்று எனக்கு தெரியும். ஆனால் இப்போது நான் அதற்காக வரவில்லை.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

நான் விசாரித்து பார்த்ததில் ஜீவானந்தம் இங்குதான் பக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் நான் பாதியில் விட்ட வேலையை முழுவதுமாக முடிப்பதற்காக தான் இங்கே வந்திருக்கிறேன். ஜீவானந்தம் உனக்கு மட்டும் எதிரி இல்லை, எனக்கும் ரொம்பவே குடைச்சல் கொடுத்திருக்கான். அதனால் ஜீவானந்தத்தை காலி பண்ணாம விட மாட்டேன் அதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறேன் என்று குணசேகரனிடம் கூறுகிறார்.

கண்டிப்பாக இவரால் ஒன்னும் பண்ண முடியாது, ஆனால் இவர் விரித்த வலையில் வளவன் குணசேகரன் மற்றும் கதிர் மாட்டுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. கூடிய சீக்கிரம் இவர்கள் ஜெயிலில் கம்பி எண்ணப் போகிறது முடிவாகிவிட்டது. ஆனால் இதில் தான் குணசேகரன் பற்றிய சுயரூபத்தை தெரிந்து கொள்ளப் போகிறார் கதிர். அதாவது கதிர் ஜெயிலுக்கு போகிற மாதிரி நிலைமை வரும், அந்த சூழ்நிலையில் குணசேகரன் தம்பியை முழுசாக கைகழுவ போகிறார்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News