நடுரோட்டில் சந்தி சிரித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஆத்திரத்தில் கதிர் செய்த காரியம்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போது எதிர்பாராத விதமாக சண்டை காட்சிகள் அரங்கேறி இருக்கிறது. ஒருபுறம் மூர்த்தி ஆர்வக்கோளாறில் நான்கு ரூமுக்கும் 4 ஏசி வாங்கி மாட்டி விட்டார். இதனால் கரண்ட் பில் 28 ஆயிரம் வந்துவிட்டது. ஆகையால் மூர்த்தி இனி ஒரு மணி நேரத்திற்கு மேல் யாரும் ஏசி போடக்கூடாது என கண்டிஷன் போட்டிருக்கிறார்.

அதுவும் இரவு காத்த கிளியாக தூங்காமல் ஒவ்வொரு ரூமுக்கும் சென்று ஏசி ஓடுகிறதா என்பதை பார்த்துவிட்டு வருகிறார். கம்பீரமாக இருந்த மூத்த அண்ணன் மூர்த்தியின் நிலைமை இவ்வாறு மாறி இருக்கிறது. மற்றொருபுறம் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் தனது கடைக்குட்டி மாப்பிள்ளையை பெரிதும் நம்பி சொத்துக்களை ஒப்படைத்து இருக்கிறார்.

Also Read : எதிர்நீச்சலை டம்மியாக்கி முதல் இடத்திற்கு தாவும் சீரியல்.. குணசேகரன் இல்லாததால் சூடு பிடிக்கும் மற்ற சேனல்கள்

ஆனால் அவர் சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டிருப்பது ஜீவாவுக்கு தெரிய வருகிறது. இதனால் மல்லியின் மகன் மற்றும் ஜீவா இருவரும் நடு ரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையில் முட்டிக் கொள்கிறார்கள். அப்போது அங்கு எதர்ச்சையாக வந்த கதிர் தன் அண்ணனை அடிப்பதை பார்த்து ஆத்திரம் கொள்கிறார். இவ்வாறு நடுரோட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பிகள் சண்டை இட்டது சந்தி சிரித்து விட்டது.

மேலும் அங்கு வந்த ரவுடிகள் ஜீவாவை ஜனார்த்தனன் தான் அடிக்க சொன்னார் என்று கூறுகிறார்கள். மருமகனை மாமனாரே ஆள் வைத்த அடிப்பதா என கோபத்துடன் பொங்கி எழுந்த கதிர் மற்றும் ஜீவா நேரடியாக மீனாவின் அப்பா வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு மீனாவின் அம்மா மட்டும் இருக்கிறார்.

Also Read : உப்புக்கு சப்பாக மாறிப்போன எதிர்நீச்சல்.. கதையே இல்லாமல் வெறும் வாய் சவடால் வைத்து உருட்டும் ஜீவானந்தம்

அவரிடம் கதிர் என் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அவ்வளவுதான் என்ன காரசாரமாக பேசிவிட்டு செல்கிறார். மேலும் கதிர் வீட்டுக்கு வந்தவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இந்த விஷயம் தெரிந்தால் மீனா கண்டிப்பாக பொங்கி எழுந்து தனது அப்பாவிடம் சண்டை போட இருக்கிறார்.

ஆனால் கடைசியில் ஜனார்த்தனன் தனது மாப்பிள்ளையை நம்பி ஏமாந்த பிறகு தான் எல்லா உண்மையும் தெரிந்து கொண்டு ஜீவாவின் காலில் விழ இருக்கிறார். இவ்வாறு எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இனிவரும் வாரங்களில் அதிரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு போனது இதுக்கு தானா?. மட்டமான வேலை செய்யும் பாரதி கண்ணம்மா வெண்பா

- Advertisement -