எதிர்நீச்சலை டம்மியாக்கி முதல் இடத்திற்கு தாவும் சீரியல்.. குணசேகரன் இல்லாததால் சூடு பிடிக்கும் மற்ற சேனல்கள்

Another Channel First Place: இதுவரை நாடகத்தை வேண்டா வெறுப்பாக பார்த்து வந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்நீச்சல் சீரியல் வந்த பிறகுதான் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அந்த வகையில் இந்த நாடகத்தை அனைவரும் தூக்கிக் கொண்டாடினார்கள். அதற்கு முக்கிய காரணம் குணசேகரனின் கதாபாத்திரம் தான்.

இதில் இவர் வில்லனாக இருந்தாலும் நக்கல் கலந்த நையாண்டி பேச்சும், காமெடியான தோற்றத்தாலையும் ரசிகர்கள் மனதில் குணசேகரன் கதாபாத்திரம் நின்னு பேசியது. அதனாலயே இந்த நாடகம் உச்சாணி கொம்புக்கு போனது. ஆனால் தற்போது இவர் இல்லாததால் கடந்த ரெண்டு எபிசோடுமே பார்ப்பதற்கு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லணும்.

Also read: உப்புக்கு சப்பாக மாறிப்போன எதிர்நீச்சல்.. கதையே இல்லாமல் வெறும் வாய் சவடால் வைத்து உருட்டும் ஜீவானந்தம்

ஆனால் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மற்ற சேனல் ரொம்பவே முனைப்புடன் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்த சேனலாக இருக்கும் விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் கவனம் திரும்பி விட்டது. இதில் ஒளிபரப்பாகி வரும் சேனல்கள் என்னதான் ரசிகர்கள் பார்த்து வந்தாலும், தற்போது அதிகமாக பார்க்க வைக்கும் நாடகங்கள் சில இருக்கிறது.

அதில் டாம் அண்ட் ஜெரியாக முதலில் இருந்தவர்கள் தற்போது ரோமியோ ஜூலியட் ஆக மாறிய முத்து மற்றும் மீனா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை பேவரிட் சீரியலாக இருக்கிறது. அடுத்ததாக எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் புது தம்பதிகளை பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்கள். அந்த வகையில் ஆகா கல்யாணம் மக்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கிறது.

Also read: டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த பிரபல சீரியல்கள்.. தொடர்ந்து முன்னிலை வகிக்கும் எதிர்நீச்சல்

இதுல வேற கூடிய விரைவில் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாக இருக்கிறது. அப்படி மட்டும் பிக் பாஸ் வந்து விட்டால் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் இதன் மேல் திரும்பி விடும். அந்த வகையில் கண்டிப்பாக எதிர்நீச்சல் டம்மியாகி போய்விடும். அடுத்தபடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் வருகிற இதயம் சீரியல் அனைவருக்கும் பிடித்தமான நாடகமாக இருக்கிறது.

இந்த நாடகம் ஏதோ ஒரு இணை புரியாத பந்தத்தை சேர்க்கும் வகையில் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி மற்ற சேனல்கள் போட்டி போட்டு ரசிகர்களின் மனதிற்கு ஏற்ற மாதிரி சீரியல்களை ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இதனால் கண்டிப்பாக எதிர்நீச்சல் சீரியல் பின்னோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

- Advertisement -