குணசேகரனின் மறு உருவமாய் மாறிய கதிருக்கு விழுந்த பளார்.. ஈஸ்வரியை பழித்து பேசும் அப்பத்தா

Ethirneechal: கதிர், அப்பத்தா, ஞானம் எல்லோரும் சேர்ந்து குடும்பப் பெண்களை மிரட்டுகிறார்கள். அண்ணனுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும் இந்த வீட்டில் இருந்து போகக்கூடாது. வக்கீல் சொல்படி கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமென மிரட்டலுக்கு ஆளாகிறார்கள் நந்தினி மற்றும் ரேணுகா.

எதையும் எதிர்த்து நிற்கும் சிங்க பெண்ணாக ஜனனி நிற்கிறார். அவருக்கு உறுதுணையாக சக்தி இருக்கிறார். அப்பத்தா கொலை வழக்கில் குணசேகரனுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்படியாக ஜனனி செயல்படுகிறார்.

ஜீவானந்தத்தை சந்தித்த ஈஸ்வரி எனக்கு ஒரு கஷ்டம் வந்தால் என் ஆறுதலுக்காக நீங்கள் வேண்டும் என்று அவரிடம் பேசிவிட்டு விடைபெறுகிறார். வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை கதிர் மற்றும் அப்பத்தா வாய்க்கு வந்தபடி அசிங்கமாக பேசுகிறார்கள்.

எல்லாத்தையும் விட ஒரு படி மேலே சென்ற அப்பத்தா, “நீ வீட்டை விட்டு ஓடுவது என்றால் பரவாயில்லை அதற்கு ஏன் என் மகன்குணசேகரனை போலீசில் மாட்டி விட்டு செல்கிறாய்” என அருவருப்பான வார்த்தையால் ஈஸ்வரியை அசிங்கப்படுத்துகிறார்.

தர்ஷினி எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு சித்தப்பா கதிரிடம் மல்லுக்கட்டுகிறார். மதுரை மீனாட்சியம்மன் முன் நின்று கதிரை மடக்குகிறார். தாரா பாப்பாக்கும் தன் அப்பா ஒரு கொலைகாரர் என்பது தெரிய வருகிறது.

கோபத்தின் உச்சிக்கு சென்று அத்துமீறி ஈஸ்வரியை கதிர் வேறு ஒரு ஆம்பளையை தேடி உள்ளீர்கள் என்று பேசியதுமே அவருக்கு கன்னத்தில் பளார் என்று ஈஸ்வரியிடம் இருந்து அடி விழுகிறது. பயத்தில் ஞானம் மற்றும் அப்பத்தா இருவரும் கப்சிப் என்று ஆகிறார்கள்.

Next Story

- Advertisement -