வார்த்தையிலேயே அருவருப்பான வக்கிரத்தை கக்கும் குணசேகரன்.. முரட்டு பீஸ்ன்னு நிரூபித்த ஞானம்

மொய் விருந்துக்கு பணம் கொடுப்பதற்கு இரண்டு லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார் ஞானம். கந்து வட்டிக்காரர்கள் வீட்டில் வந்து சண்டை போடவே, இது என்னுடைய வீடு என குணசேகரன் அவர்களை திட்டி அனுப்புகிறார். வீட்டுப் பெண்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள்.

நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கே சென்று பணத்தை திருப்பி செலுத்த கொஞ்சம் அவகாசம் கேட்கிறார்கள். வாய்க்கு வந்தபடி வட்டிக்காரர்கள் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். அவர்கள் கூறியதில் ஒரு விஷயத்தை வீட்டிற்கு வந்து அனைவரிடமும் தெளிவுபடுத்துகிறார் ரேணுகா.

அதாவது ரேணுகா, நான் நாட்டிய பள்ளி ஆரம்பிக்க விருக்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வட்டி மற்றும் அசலை திருப்பி தந்து விடுவேன் என கூறியுள்ளார் அதற்கு வட்டி கொடுத்தவர்கள், எங்களிடமே இடம் இருக்கிறது, அங்கே பள்ளி நடத்துங்கள், அப்படியே எங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கூறுகிறார்கள்.

நாட்டிய பள்ளி, எங்கள் பெயரில் தான் இருக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றனர். உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இருந்து நீங்கள் உங்கள் கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்புகிறார்கள். இதனை வீட்டில் அனைவரிடம் தெரிவிக்கிறார் ரேணுகா.

முரட்டு பீஸ்ன்னு நிரூபித்த ஞானம்

இதை ஒட்டு கேட்ட கரிகாலன் அப்படியே வேறு ஒரு அருவருப்பான வார்த்தைகள் போட்டு குணசேகரனிடம் பற்ற வைக்கிறார். அவரிடம் முட்டா பீசு கரிகாலன், ரேணுகா அக்கா நடனமாடி சம்பாதிக்க போகிறார் என ஒன்னுக்கு ரெண்டா போட்டுக் கொடுக்கிறார்.

கோபம் தலைக்கேறிய குணசேகரன் கீழே இறங்கி வந்து, ஆட்டம் போட்டு தான் கடனை அடைக்க போறீங்களா என வாய்க்கு வந்தபடி அருவருப்பா பேசுகிறார். வார்த்தையின் வக்கிரத்தை புரிந்த ஞானம் அண்ணன் என்று கூட பாக்க மாட்டேன் என கொதித்து எழுகிறார். உங்களை காணாமல் செய்து விடுவேன் என்று முரட்டுத்தனமாக கத்துகிறார்.

ஆண்மைக்கான திமிருடன் திரியும் குணசேகரன்

Next Story

- Advertisement -