மாமியார் வீட்டு விருந்துக்கு ரெடியான குணசேகரன்.. ராமனும் இல்ல லட்சுமணனும் இல்லன்னு சக்தி வைத்த வேட்டு

Ethirneechal: நந்தினி மசாலா வியாபாரத்தை அமோகமாக தொடங்கி விட்டார். மொத்த குடும்பமும் மசாலா பாக்கெட்டுகளை போட்டு நந்தினிக்கு உதவி செய்கிறது. உழைப்பில் நேர்மையையும், நியாயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என நந்தினி கூறியதிலிருந்து அவர் நிச்சயமாக இந்த பிசினஸில் ஜெயிப்பார் என்பது தெரிகிறது.

இதனிடையே பெரிய குற்ற உணர்வோடு இருக்கும் ஜனனி, அப்பத்தாக்காக நாம் ஒன்றுமே செய்யவில்லை என கண்கலங்குகிறார். எல்லோரும் சமாதானம் செய்யும் போதே ஜனனிக்கு இன்ஸ்பெக்டர் இடம் இருந்து போன் வருகிறது. குணசேகரனுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் கிடைத்து விட்டது என தெரிவிக்கிறார் இன்ஸ்பெக்டர்.

தர்ஷினி கடத்தல் கேஸ் சம்பந்தமாக விசாரிக்கும் போது, குணசேகரன் 2 படுபாதக செயலில் ஈடுபட்டு உள்ளதாக கூறுகிறார் இன்ஸ்பெக்டர். ஜனனியிடம், அப்பத்தாவை குணசேகரன் தான் கொன்று விட்டார் அதற்குண்டான ஆதாரங்கள் எல்லாம் இருப்பதாகவும், மேல் இடத்திலிருந்து அவரை கைது செய்ய ரெடியாகி கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.

சக்தி வைத்த வேட்டு

ஏற்கனவே குணசேகரனின் நண்பரான “கிள்ளிவளவன்” பழைய ரிட்டையர்டு போலீசை வைத்து அப்பத்தாவை தீர்த்து கட்டி இருக்கிறார் குணசேகரன். இதற்கு உண்டான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது எனவும் விவரிக்கிறார் இன்ஸ்பெக்டர்.

கிள்ளி வளவனை வேறு ஒரு குற்றம் தொடர்பாக விசாரிக்கும் போது அவர் போனில் உள்ள ஆடியோவை எல்லாம் போலீஸ் கண்காணித்து குணசேகரனின் படுபாதக செயலை கண்டுபிடித்துள்ளனர். கிள்ளி வளவனுடன் அவர் பேசிய ஆடியோ தான் இதற்கு ஆதாரம்.

அப்பத்தாவிற்கு விஷம் கலந்து கொடுத்து யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கார் ஏறிந்து விபத்துக்குள்ளானது போல் செட் பண்ணி விட்டார். தர்ஷினி கடத்தல் மற்றும் அப்பத்தா கொலை வழக்கு இரண்டிலும் குணசேகரனுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறது.

ஜனனி மற்றும் சக்தி இருவரிடமும் இன்ஸ்பெக்டர் பேசுகிறார். சக்தியிடம் உங்கள் அண்ணன் என்று கூறும்பொழுது, தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அவர் ஒன்றும் ராமன் கிடையாது நான் லக்ஷ்மன் கிடையாது என்று அண்ணனுக்கு எதிராக நிற்கிறார். வீட்டில் போலீஸ் படைகளோடு வந்து குணசேகரனை மாமியார் வீட்டுக்கு அழைக்க ரெடியாகிவிட்டது காவல்துறை.

எவ்வளவு ஸ்கெட்ச் போட்டாலும் சிக்காத குணசேகரன்

Next Story

- Advertisement -