சுவாரசியம் குறையும் எதிர்நீச்சல்.. குணசேகரன் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்

சன் டிவியில் அனைவரையும் சமீப காலமாக ஆர்வமாய் பார்க்க வைத்த ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு கிடைக்கும் ஆதரவும் மற்றும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. ஆனால் கொஞ்ச நாட்களாகவே இந்த சீரியல் சுவாரஸ்யம் குறைந்த மாதிரி கதை அமைந்திருக்கிறது. ஆனாலும் இதை பார்ப்பவர்களின் கவனம் மட்டும் திசை திரும்பவே இல்லை.

இதற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தான். ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக மக்களிடம் ஈசியாகி ரீச் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் இவர்கள் அனைவரையும் மிஞ்சிய ஒரு கேரக்டர் என்றால் குணசேகரன் தான். இவர்தான் இந்த சீரியலுக்கு முதுகெலும்பு என்றே சொல்லலாம்.

Also read: குணசேகரனை விட மட்டமாக இறங்கிய கதிர்.. சக்தியை மன்னித்த ஜனனி

என்னதான் இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆகவும் பெண்களை அடிமையாக நடத்தும் கேரக்டரில் பேசினாலும் இவருக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இவருக்காக தான் எதிர்நீச்சல் சீரியலை பார்க்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவரை தற்போது அடிக்கடி எபிசோடுகளில் பார்க்க முடியவில்லை.

காரணம் இவருக்கு கொடுக்கிற சம்பளம் போதாது என்பதால் இந்த சீரியலில் இருந்து தற்காலிகமாக நின்று விட்டதாக தெரிகிறது. அதாவது தனக்கு இருக்கிற மார்க்கெட்டை தெரிந்து கொண்டு சம்பளம் எனக்கு அதிகம் வேண்டும் என்று டிமாண்ட் செய்து இருக்கிறார். இவர் கேட்டபடி எந்தவித ரெஸ்பான்ஸ் வராததால் படப்பிடிப்பிற்கு சில நேரங்களில் வராமல் போய்விடுகிறார். இதனால்தான் இவர் இல்லாமல் எபிசோடுகள் வருகிறது.

Also read: பாக்யாவை தவறாக புரிந்த கோபி.. என்னைய பழிவாங்க இப்படி ஒரு முடிவா?

கூடிய விரைவில் இதற்கான பிரச்சனைகளை சரி செய்து மறுபடியும் குணசேகரன் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் குணசேகரன் இல்லையென்றால் அந்த சீரியலை பார்க்கிறதே வேஸ்ட். இது இயக்குனருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். அதனால் குணசேகரன் எதிர்பார்த்தபடி அவருக்கு சம்பள பிரச்சனை தீர்த்த பிறகு அவர் மறுபடியும் நடிக்க வருவார். அதுவரை இனி வரும் எபிசோடுகளில் அவரை அடிக்கடி பார்ப்பது கொஞ்சம் கடினம் தான்.

அதுவரை இனி வரும் எபிசோடுகளில் குணசேகரன் கேரக்டரை அடிக்கடி பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். சீரியலில் தான் பணம் பணம் என்று சொல்லும் கேரக்டர் என்றால் நிஜத்திலும் அவருடைய மார்க்கெட்டை தெரிந்து கொண்டு சம்பளத்தை அதிகம் கேட்டு பிரச்சனையை செய்வது நிஜமாகவே இவருடைய கேரக்டர் குணசேகரன் மாதிரி தான் இருக்குமா என்று தோன்றுகிறது.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

- Advertisement -