வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஐஸ்வர்யா போதைக்கு பலிகாடாகும் கண்ணன்.. கடனை அடைக்க செய்த மட்டமான வேலை

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சீக்கிரமா முடித்து விடுங்கள் என்று பார்ப்பவர்களை கெஞ்சாத குறையாக சொல்ல வைக்கிறது. ஆனாலும் அந்த நேரம் வரும் பொழுது அவர்களை அறியாமலேயே ரிமோட்டை மாற்ற வைத்து நாடகத்தை பார்க்க வைப்பது தான் இந்த நாடகத்தின் வெற்றி.

ஐஸ்வர்யா, கண்ணன் சம்பாதிக்கிறான் என்ற திமிரில் தனியாக கூட்டிட்டு போய் குடித்தனம் செய்தார். கடைசியில் ஐஸ்வர்யா போதைக்கு கண்ணனை பலிகாடாக ஆக்கினது தான் மிச்சம். பிறகு இவர்களை இப்படி தனியாக விட்டால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வருமோ அத்துடன் கண்ணனை இப்படி பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று கதிர் அவர்களை அவரோட வீட்டிற்கு கூட்டு போய் விட்டார்.

Also read: மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

அங்கே போன பிறகு ஐஸ்வர்யா ஒழுங்காக திரிந்து இருப்பார் என்று எதிர்பார்த்தல் அங்கேயும் ஓவராக அட்டகாசம் செய்கிறார். இதற்கிடையில் அத்தாட்சி வீட்டிற்கு வந்து வளைகாப்புக்காக வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்ததை வந்து திரும்ப கேட்கிறார். அதற்கு கண்ணன் எங்களால் இப்பொழுது கொடுக்க முடியாது இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

ஆனால் அதெல்லாம் எனக்கு தெரியாது நாளைக்கு நான் வரும்போது எனக்கு கொஞ்சமாவது பணம் கொடுத்தாக வேண்டும். உங்களால் நான் கஷ்டப்பட முடியாது என்று சொல்கிறார். இவர்கள் பேசுவதை வெளியில் இருந்து முல்லை கேட்கிறார். அப்பொழுது இவர்களுக்கு ஏதோ ஒரு பண பிரச்சினை இருக்கு என்று தெரிந்து கொள்கிறார்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

பிறகு கண்ணன் பேங்கில் லஞ்சம் வாங்கும் ஒரு சூழல் ஏற்படுகிறது. இந்த பணத்தை பார்த்த உடனே கண்ணன் மனதிற்குள் இதை வைத்து எப்படியாவது நம்ம அத்தாச்சியிடம் கொடுத்து கடனை அடைத்து விடலாம் என்று எண்ணம் வந்துவிட்டது. ஆனாலும் மனதிற்குள் ஒரு பயம் தயக்கம் இருக்கிறது.

வேற வழி இல்லை என்பதற்காக பணத்தை எடுத்து விடுகிறார். இதனால் கண்டிப்பாக கண்ணன் வேலை பறிபோகப் போகிறது. அத்துடன் இவருக்கும் இவரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அவமானப்பட போகிறார்கள். தப்புக்கு மேல் தப்பு பண்ணி அதை மறைக்கும் மட்டமான வேலையை செய்யும் கண்ணனை பார்க்கும் பொழுது எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டியா என்று சொல்லத் தோன்றுகிறது.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

- Advertisement -

Trending News