வெண்பா கன்னத்தை பதம் பார்த்த கண்ணம்மா.. செம அடி, ஒரே கதையை எப்படி தா உருட்ட முடியுதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெளியான தொடர் தான் பாரதி கண்ணம்மா. ரசிகர்களே போதுமென்று கதறும் அளவுக்கு இந்த தொடர் ஒளிபரப்பானது. அது போதாது என்று தற்போது இரண்டாவது சீசனையும் தொடங்கி இருக்கிறார்கள். ஒரு மாதமாக இந்த சீரியலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

முதல் சீசனில் கதாநாயகனாக நடித்த அருணை தவிர பெரும்பாலான கேரக்டர்கள் இரண்டாவது சீசனில் இடம்பெறுகிறார்கள். பாரதி கேரக்டரில் மட்டும் சிபு சூரியன் என்பவர் நடிக்க கண்ணம்மா, வெண்பா போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் பழைய ஆர்டிஸ்ட்கள் தான். ஆர்டிஸ்ட்கள் தான் பழசு என்று பார்த்தால் மொத்த கதையுமே அரைத்த மாவை அரைப்பது போல் தான் ஆரம்பிக்கிறது.

Also Read: எந்த கேரக்டரா இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்.. சினிமாவை வெறுத்த பாரதி கண்ணம்மா நடிகை

தொடக்கத்திலேயே மோதலில் ஆரம்பித்த பாரதி மற்றும் கண்ணம்மாவின் சந்திப்பு நாளுக்கு நாள் காதலாக மாறிக்கொண்டே வருகிறது. தற்போது வெளியூர் சென்றிருக்கும் பாரதியும், கண்ணம்மாவும் ஒரே அறையில் தங்கி இருக்கும் பொழுது கண்ணம்மாவை ரவுடிகள் தாக்க வருகிறார்கள். அந்த நேரத்தில் பாரதி அவர்களுடன் சண்டையிட்டு கண்ணம்மாவை காப்பாற்றுவதால் அங்கிருந்து காதல் காட்சிகள் தொடங்க இருக்கிறது.

கதையில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் முதல் சீசனில் வெண்பா பாரதியை காதலித்து திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று தான் அத்தனை குழப்பங்களையும் ஏற்படுத்துவார். ஆனால் இந்த சீசனில் வெண்பா பாரதியை கண்டாலே வெறுப்பது போல் இதுவரை கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

Also Read: பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய சன் டிவி.. டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்

வெளிநாட்டில் இருந்து திரும்பும் வெண்பாவை சந்திக்கும் கண்ணம்மாவின் தங்கை அவரிடம் நட்புடன் பேச வெண்பாவு அவளுடைய பழைய திமிரை காட்டுகிறாள். இதை அறிந்த கண்ணம்மா தன் தங்கையுடன் வெண்பாவை நேரில் சென்று பார்த்து அவளுடைய திமிருக்கு பதில் சொல்லும் விதமாக பளார் என்று ஒரு அறையும் விடுகிறார், இதுதான் இன்றைய ப்ரோமோ.

பாரதி கண்ணம்மா 2 என்று புதிய கதை போல் இந்த சீசன் ஆரம்பித்தாலும் வழக்கம் போல கண்ணம்மா வெண்பா இடையேயான பிரச்சனை பழைய கதை போல் தான் இருக்கிறது. மேலும் கண்ணம்மாவை பழிவாங்குவதற்காகவாது இனி வெண்பா பாரதியை காதலிக்கவும் திருமணம் செய்ய ஆசைப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. வழக்கம் போல பழைய கதையை தான் உருட்ட இருக்கிறார்கள்.

Also Read: ஏற்கனவே உருட்டுனது பத்தாதா?. விரைவில் வெளிவர உள்ள பார்ட் 2 சீரியல்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்