வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எதிர்நீச்சல் சீரியல் கனிகா நடித்த 4 படங்கள்.. எதிரி படத்தில் பாட்டில் மணியுடன் அடித்த லூட்டி 

தற்பொழுது டிஆர்பி யில் பயங்கர டஃப் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சிடுசிடுவென இருக்கும் குணசேகரனின் மனைவியாக, ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகுவதற்கு முன் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் படங்களில் நடித்திருக்கிறார். அப்படியாக இவர் நடிப்பில் வெளியான 4 படங்களை இங்கு காணலாம்.

பைவ் ஸ்டார்: சுசி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பைவ் ஸ்டார். இதில் பிரசன்னா, கார்த்திக், கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனுராதா ஸ்ரீராம் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் கனிகா, பிரசன்னாவின் காதலியாக ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

டான்சர்: இயக்குனர் கேயார் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டான்சர். இதில் குட்டி, ராபர்ட், கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் கால் ஊனமுற்ற நடனக்கலைஞரான குட்டியின் நடன நிகழ்ச்சியை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. இப்படத்தில் கனிகா, திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் ஹீரோவிற்கு நம்பிக்கையூட்டும் நாயகி ஆகவே வலம் வந்திருப்பார்.

வரலாறு: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வரலாறு. இதில் அஜித் குமார், கனிகா, அசின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதிலும் பரதநாட்டிய கலைஞரான அஜித்தையே வெறுத்து ஒதுக்கும் காயத்ரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: அஜித்துடன் ஜோடி போட்டு சீரியல் நடிக்கும் 5 அம்மணிகள்.. எதிர்நீச்சல் ஈஸ்வரியாக மாஸ் காட்டும் வரலாறு கனிகா

எதிரி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எதிரி. இதில் மாதவன், சதா, கனிகா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் கனிகா கல்லூரி மாணவியாக காயத்ரி என்னும்  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் பாட்டில் மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாதவனுடன் இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். 

இவ்வாறு இந்த 4 படங்களிலும் கனிகா கதாநாயகியாக நடித்துள்ளார். அதிலும் திடீரென்று சின்னத்திரையின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சின்னத்திரை சீரியல்களில் இவரின் நடிப்பானது ரசிகர்களால் பெரிதும் பாராட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

Also Read: வரலாறு பட கனிகா ஞாபகம் இருக்கா.? 40 வயதிலும் செல்பியில் அலறவிட்ட புகைப்படம்

- Advertisement -

Trending News