‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சிறுத்தை சிவா சமீபத்தில் இயக்கி வெளியான அண்ணாத்தே திரைப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததால் இந்த படத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பயங்கரமாக உழைத்து வருகிறார் சிவா.

சமீபத்தில் படத்தின் டைட்டில் ஆனது ஒரு சின்ன கிலிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியானது. இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பான் இந்தியா படங்களின் வரிசையில் சூர்யா முதன் முதலில் இந்த கங்குவா திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறார். இதுவே அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

Also Read: பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

அதிலும் தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடுத்தடுத்து படத்தைப் பற்றி சுட சுட அப்டேட் கொடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் வெளியான போதே பலருக்கும் கங்குவா என்றால் என்ன என்று மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டது. அதை பற்றி பேசுகையில் தயாரிப்பாளர் கங்கு என்றால் நெருப்பு கங்குவா என்றால் நெருப்பிலிருந்து பிறந்தவன் என்ற அர்த்தத்தை சொல்லி இருக்கிறார்.

மேலும் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, டீசர் ஆனது மிகப் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பான் இந்தியா படம் என்பதால் டீசரின் பின்னணி குரல் அந்தந்த மொழியின் சூப்பர் ஸ்டார்கள் உடையதாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் தமிழில் யார் பின்னணி குரல் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்கனவே பற்றி கொண்டது.

Also Read: அதிரி புதிரியாக டைட்டிலை வெளியிட்ட சூர்யா 42 டீம்.. ட்ரெண்டாகும் வீடியோ

படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் சுமார் 80 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம். இது தமிழ் சினிமாவிலேயே ஒரு பென்ச் மார்க் வியாபாரம் என்று சொல்லி இருக்கிறார் ஞானவேல் ராஜா. மேலும் படத்தின் டீசர் ஆனது வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், டீசர் வெளியிடுவதற்காகவே ஒரு நிகழ்ச்சியை பண்ணலாம் என படக்குழு முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே கங்குவா வரலாற்று திரைப்படம், 3D தொழில்நுட்பம் என அடுத்தடுத்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் அப்டேட்டுகள் படத்தின் மீது அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமலஹாசன் டீசருக்கு பின்னணி குரல் கொடுத்தது போல் கங்குவா திரைப்படத்திற்கு கொடுப்பாரா அல்லது ரஜினிகாந்த், விஜய் போன்ற ஏதேனும் வேறொரு சூப்பர் ஸ்டார்கள் பின்னணி குரல் கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Also Read: எப்டுறா! கங்குவா டைட்டில் 1983-ல் வச்சிட்டாங்களா? அர்த்தத்தை பார்த்தா பெரிய சம்பவமா இருக்கும் போல

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்