கமலுக்கு கல்கி பட அக்ரிமெண்டில் வைத்த செக்.. பாகுபலியால் ஆண்டவருக்கு வந்த சோதனை

கமல் மற்றும் பிரபாஸ் நடிப்பில் கல்கி படம் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது, கூடிய விரைவில் இந்த படத்தை தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம். ஆரம்பத்தில் இந்த படம் மே 9 2024 அன்று ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் இப்பொழுது வி எப் எக்ஸ் வொர்க் காரணமாக ஜூன் 27 தள்ளி வைத்து விட்டனர்.

கல்கி படம் இரண்டு பாகங்களாக வெளி வருகிறது. கமல் தன்னுடைய ஸ்டேட்டஸில் இருந்து இறங்கி இதில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த கதாபாத்திரம் பண்ணுவதற்கு 150 கோடிகள் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார். இப்பொழுது பாகுபலி பிரபாஸால் அவருக்கு நெருக்கடி வந்துள்ளது.

பிரபாஸ் நடித்து வெளிவந்த படம் சலார். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கும் திட்டத்தில் தான் இருந்தார்கள். முதல் பாகம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்பொழுது இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவில் இருக்கின்றனர். ஏற்கனவே பிரபாஸுடன், இரண்டு பாகங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கும்படி தான் அக்ரிமெண்ட் போட்டுள்ளனர்.

இப்பொழுது பிரபாஸ் மற்றும் சலார் பட இயக்குனர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு முட்டிக்கொண்டனர். அதனால் இதன் இரண்டாம் பாகம் வெளிவருமா என்பது பெரும் சந்தேகம்தான். இந்த படத்தைப் போல தான் கல்கி படமும் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.

பாகுபலியால் ஆண்டவருக்கு வந்த சோதனை

முதல் பாகத்தில் கமலுக்கு மிகவும் கம்மியான ரோல்தான். இரண்டாம் பாகத்தில் தான் அவருடைய கதாபாத்திரம் முழுமையாக வரும். இப்படி இருக்கும் பட்சத்தில் 2 பாகங்களுக்கும் சேர்த்து தான் அவ்வளவு சம்பளம் மற்றும் கால் சீட் என முன்கூட்டியே அக்ரிமெண்ட் போட்டு விட்டனர். கமலும் மிக பிசியான நடிகர் அதனால் தெளிவாக வேலையை பார்த்துள்ளனர்.

கல்கி முதல் பாகம் ஓடவில்லை என்றாலும், அவருடைய கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என்றாலும் யாரும் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகக் கூடாது என்று தான் ஆண்டவருக்கு இப்படி ஒரு செக் வைத்துள்ளனர். எல்லாம் பிரபாஸின் சலார் படத்தால் வந்த சோதனை தான்.

- Advertisement -