கல்கியின் நாவலுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பொன்னியின் செல்வன் 2-ல் மணிரத்னம் செய்த பல குளறுபடிகள்

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் முயற்சியால் திரைப்படமாக மாறி இருக்கிறது. ஆனால் அது நாவலாகவே இருந்திருக்கலாமே என்ற எண்ணம் தான் இப்போது கல்கியின் தீவிர ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

அந்த அளவுக்கு மணிரத்னம் சினிமாவிற்காக அந்த நாவலை மொத்தமாக குளறுபடி செய்து வைத்திருக்கிறார். முதல் பாகத்திலேயே சில குறைகளை ரசிகர்கள் தெரிவித்த போதிலும் இரண்டாம் பாகத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய சஸ்பென்ஸ் கதாபாத்திரங்களை இயக்குனர் டம்மியாக்கி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் நந்தினி, ஆதித்த கரிகாலனின் சிறுவயது காதல் கதையை மணிரத்தினம் இன்னும் கொஞ்சம் தெளிவுப்படுத்தி காட்டி இருக்கலாம்.

Also read: பொன்னியின் செல்வன் வெற்றியால் 20 படத்தில் கமிட்டான நடிகர்.. திரும்பவும் மார்க்கெட்டை உயர்த்திய மணிரத்னம்

அதில் நந்தினியாக வரும் சாராவின் நடிப்பு பிரம்மிக்க வைத்தாலும் சிறு வயது விக்ரமாக வந்திருக்கும் அந்த நடிகரின் நடிப்பு பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து சுந்தரர் சோழர் மற்றும் ஊமை ராணியின் கடந்த பக்கங்களை ஓவியம் வடிவில் இயக்குனர் காட்டியிருப்பது ரொம்பவும் அபத்தமாக இருந்தது.

கதைக்கு மிக முக்கிய திருப்பமாக இருக்கும் அந்த காட்சியில் ஏன் அவருக்கு இத்தனை அவசரம் என்று தெரியவில்லை. அதைத்தொடர்ந்து நந்தினியின் கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்ட அளவிற்கு கூட மந்தாகினியின் கேரக்டர் அமையவில்லை. அதை மட்டும் தெளிவாக காட்டியிருந்தால் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு இன்னும் அதிக அளவில் பேசப்பட்டிருக்கும்.

Also read: சோழ, பாண்டியர்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி.. யாத்திசை, பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

அதற்கு அடுத்தபடியாக ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இருக்கும் சஸ்பென்ஸை உடைத்திருக்கும் விதமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியவில்லை. அது பெரிய வரலாற்றுப் பிழையாகவே பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து சேந்தன் அமுதன் என்ற கதாபாத்திரம் கதையிலேயே மிகப்பெரிய அதிர்வை கொடுக்கக்கூடிய சஸ்பென்ஸ் கலந்த கேரக்டர் ஆகும்.

ஆனால் அந்த கேரக்டரை கடைசி வரையில் டம்மி போன்று மணிரத்தினம் காட்டி இருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதேபோன்று நந்தினியின் முடிவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு குளறுபடியான கதையை பார்த்த நாவல் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். மேலும் சினிமாவிற்காக மணிரத்தினம் சில விஷயங்களை மாற்றினாலும் முக்கிய காட்சிகளில் சொதப்பி இருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூலை தாண்டியதா PS2.? முதல் வார கலெக்சன் ரிப்போர்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்