சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விடிஞ்சா திருமணம், ஹீரோயின் உடன் இரவை கழித்த உலக நாயகன்.. நம்பி ஏமாந்த வாரிசு நடிகை

Actor Kamal: கமலை பொருத்தவரை ரொமான்ஸ் காட்சிகள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அசால்டாக நடித்து விடுவார். இது சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு ரொம்பவே பொருந்தும். அந்த வகையில் கமல் வாழ்வில் எண்ணற்ற பெண்கள் வந்து போயிருக்கின்றனர் என்பது ஊர் உலகம் அறிந்தது தான்.

ஆனால் விடிந்தால் திருமணத்தை வைத்துக் கொண்டு முதல் நாள் இரவு ஒரு நடிகையுடன் அவர் இருந்திருக்கிறார் என்னும் செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அந்த வகையில் கமல் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடன் காதலில் இருக்கும் போதே வேறொரு நடிகையுடனும் இவர் காதலில் இருந்திருக்கிறார்.

Also read: பஸ் ஓட்டிய ஷர்மிளாவை அசிங்கப்படுத்திய ஓனர்.. ஓலா, உபெர்-க்கு போட்டியாக தொடங்கும் புதிய தொழில்

அந்த நடிகை வேறு யாரும் அல்ல காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் ரேகா தான். பாலிவுட் திரை உலகில் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்த இவர் கமலை காதலித்திருக்கிறார் என்பது பலருக்கும் புதிய தகவலாக தான் இருக்கிறது. அதன்படி திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கமல் இவருடன் தான் இருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் எனக்கு வாணி கணபதியை திருமணம் செய்ய பிடிக்கவில்லை உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் இவர் கூறினாராம். ஆனால் மறுநாள் காலையில் திட்டமிட்டபடி அந்த திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலச்சந்தர் தான். அவருடைய வற்புறுத்தலின் காரணமாகவே இந்த திருமணம் நடந்திருக்கிறது.

Also read: உயிர் போகும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தும் மாமன்னன் ரிலீஸ்.. முக்காடு போட வைக்கும் உதயநிதி

கமலின் வார்த்தைகளை நம்பி இருந்த ரேகா இந்த திருமணத்தால் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறார். அது மட்டுமின்றி அன்றைய நாள் தான் கமலை அவர் சந்தித்த இறுதி நாளாகவும் இருந்திருக்கிறது. அதன் பிறகு அவர் ரேகாவை கண்டு கொள்ளவே இல்லையாம். இப்படி கமலை காதலித்து ஏமாந்த நடிகைகளின் லிஸ்டில் வாரிசு நடிகையான இவரும் இடம் பெற்று இருக்கிறார். இந்த செய்தியை பிரபலம் இதயக்கனி ஒரு சேனலில் வெளிப்படையாகவே போட்டு உடைத்துள்ளார்.

மேலும் பல குளறுபடிகளுக்கு இடையே நடந்த கமலின் முதல் திருமணம் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு சரிகாவை திருமணம் செய்து கொண்ட கமல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார். தற்போது அதுவும் நிலைக்காத நிலையில் உலக நாயகன் தனிமையில் இனிமை கண்டு வருகிறார்.

Also read: பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

- Advertisement -

Trending News