35 வருட ரகசியத்தை காப்பாற்றிய கமலுக்கு போட்ட கிடுக்குபிடி.. ஆண்டவர் உடைக்க போகும் சஸ்பென்ஸ்

35 Years Secret: கமல், இந்தியன் 2 பட ப்ரோமோஷனல் கடும் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் இரண்டு ஜாம்பவான்களும் உச்சம் தொட்டுள்ளனர் என பல பேர் பாராட்டி தள்ளுகிறார்கள். அந்த அளவிற்கு நடிப்பில் கமலும், இயக்குவதில் சங்கரும் பட்டையை கிளப்பி இருக்கிறார்களாம்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஜூலை 12 வெளியாகும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் கமல் ஏழு கெட்டபில் தோன்றுகிறார். இந்த படம் இன்னொரு பாகமாகவும் வெளிவர இருக்கிறது. அதில் கமல் ஐந்து கெட்டபில் வருகிறாராம்

இதனிடையே இந்தியன் 2 படமோஷனுக்காக கமல் மற்றும் பட குழுவினர் பம்பாய் சென்றுள்ளனர். அங்கே இருக்கும் பத்திரிகையாளர்கள் கமலிடம் கிடக்குப்பிடி கேள்வி ஒன்றை கேட்டுள்ளனர். 35 வருடங்களாக கமல் கட்டி காப்பாற்றிய ரகசியத்தை நியாயமான முறையில் கேட்டுள்ளனர்.

ஆண்டவர் உடைக்க போகும் சஸ்பென்ஸ்

1989ஆம் ஆண்டு வெளிவந்த கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில், நான்கு அடி அப்பு கமல் வேடத்தில் எப்படி நடித்தீர்கள். அந்த காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது, வருங்கால சங்கதியினருக்கு இதை நீங்கள் கற்பிக்க வேண்டாமா என கமலிடம் கிடுக்கு பிடி போட்டு பத்திரிகையாளர்கள் கேட்டு விட்டனர்.

இதனை எதிர்பாராத கமல் நீங்கள் கேட்பது நியாயமான கேள்வி. இந்த கேள்விக்கு இன்னும் ஒன்றரை மாதங்களில் பதில் கூறுகிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார். இதுவரை மக்களுக்கு புரியாத புதிராய் இருந்த அப்பு கமல் கெட்டப்பிற்கு இன்னும் 45 நாட்களில் விடை கிடைக்கப் போகிறது.

கமல் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த 35 வருட ரகசியத்தை போட்டு உடைக்க போகிறார். வருங்கால சங்கதியினருக்கு இது நிச்சயமாக தெரிய வேண்டும் என ஆண்டவர் இதற்கு விடை கொடுக்கிறார். அபூர்வ சகோதரர்கள் படம் சூட்டிங் நேரத்தில் எல்லோரிடமும் இந்த ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கி உள்ளனராம்.

Next Story

- Advertisement -