பிறவிக்கலைஞன் வித்தைக்காரன்னு நிரூபித்த கமல்.. இறந்த 3 பேருக்காக ஆண்டவர் போட்ட அடித்தளம்

Senapathy master Class: இந்தியன் படம் சுமார் 28 ஆண்டுக்கு பின்னர் இரண்டாம் பாகமாக வெளி வருகிறது. ஒரு வரி செய்தியை வைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஷங்கர். ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் இந்தியன் 2 படம் ரிலீசாக உள்ளது.

ஊழல், லஞ்சம் இது ரெண்டும் தான் இந்த படத்தின் அஸ்திவாரக்கதை . 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மக்கள் ரசிப்பார்களா என்ற ஒரு பெரிய கேள்விக்குறி இருந்தது. லஞ்ச ஒழிப்பு பற்றி பல படங்கள் வந்த நிலையில் இப்பொழுது அதே கதை எடுபடாது என கூறிக் கொண்டனர்.

ஆனால் எல்லோருடைய வாயையும் மூடும் அளவிற்கு இந்தியன் 2 வின் ட்ரெய்லர் ரிலீசாகி அட்டகாசப்படுத்தி உள்ளது. படத்தில் கமல் கிட்டத்தட்ட 7 கெட்டப்புகளில் தோன்றுகிறார். ட்ரெய்லரில் இவர் வரும் காட்சிகள் அட்ராசிட்டியை கிளப்புகிறது.

102 வயது தாத்தாவாக சேனாதிபதியை காட்டுகிறார்கள். நூறு வயதை தாண்டியும் முறுக்கேற்றிய உடம்பு. தற்காப்பு வர்மக்கலை என மொத்த கைத்தட்டலையும் பெறுகிறார் கமலஹாசன்.முக்கியமான வில்லனாக இதில் எஸ் ஜே சூர்யா மிரட்டி இருக்கிறாராம்.

இறந்த 3 பேருக்காக ஆண்டவர் போட்ட அடித்தளம்

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தில் இறந்து போன மூன்று கலைஞர்களையும் கௌரவப்படுத்தியுள்ளார் கமலஹாசன். நெடுமுடி வேணு, மனோபாலா, சின்னக் கலைவாணர் விவேக் 3 பேரும் முக்கால்வாசி படத்தில் இருக்கிறார்களாம்.

இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடைசி வரை படத்தில் இருக்க வேண்டுமென்று கமல், சங்கரிடம் ஒரே போடாக போட்டு விட்டாராம். அதனால் ஸ்கிரீனிங் டெக்னாலஜியை பயன்படுத்தி டப்பிங் கலைஞர்கள் உதவியோடு, இறந்த மூன்று பேர் காட்சிகளையும் இந்த படத்தில் வைத்திருக்கிறார் சங்கர்

Next Story

- Advertisement -