பிறந்தநாளுக்கு விஜயுடன் மல்லு கட்டும் கமல் .. ஜூன் 21-ல் ரீ ரிலீஸ் ஆகும் தளபதியின் 2 படங்கள்

Thalapathy 50th Birthday: தளபதி விஜய் ரசிகர்கள் பயங்கர குஷியான மூடில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்னும் இரண்டு நாட்களில் விஜயின் 50வது பிறந்தநாள் வரப்போகிறது. தளபதியின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாட இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மீண்டும் ரீரிலீஸ் அவருடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் தான். விஜய் நடித்து பெரிய வெற்றி பெற்ற கில்லி படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுவரை ரீரிலீஸ் செய்யப்பட்ட மற்ற ஹீரோக்களின் படங்களை இந்த படம் தோற்கடித்து விட்டது.

ஆனால் விஜய் பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்படும் படங்கள் அது போன்ற வெற்றியை அடையுமா என்பது தற்போது பெரிய சந்தேகமாகிவிட்டது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான, அதுவும் பெரிய அளவில் பொருளாதார வெற்றியை பெறாத ஒரு படம் விஜய் ரசிகர்களுக்கு இந்த பயத்தை கொடுத்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

2k கிட்சுகள் அதிகம் கொண்டாட காத்திருக்கும் கமலின் அந்த படம்

மலையாளத்தில் ரிலீஸ் ஆகி தமிழ் டப்பிங் செய்யப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம் மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் ஏக போக வெற்றி அடைந்தது. இதற்கு காரணம் அந்த கிளைமாக்ஸ் சீனில் வரும் கண்மணி அன்போடு பாடல் தான்.

இந்த பாட்டின் மூலம் கமலின் குணா படம் பெரிய அளவில் கவனத்தை பெற்றது. குணா குகையை சுற்றி பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கினார்கள். மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட குணா படத்துடன் விஜய் நடித்த போக்கிரி மற்றும் துப்பாக்கி படங்கள் ரீரிலீஸ் செய்யப்படுவதால் கில்லி அளவுக்கு கவனத்தை பெறுமா என்பது தான் இப்போது இருக்கும் பெரிய சந்தேகம். இதற்கு விடையை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் மீண்டும் ட்ரெண்ட் ஆன குணா

Next Story

- Advertisement -