60 கோடி மஞ்சும்மல் பாய்ஸுக்கு வசூல் கிடைக்க கமல் மட்டுமே காரணம்.. கொளுத்தி போட்ட உயிர் நண்பன் 

Manjummel boys: கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்திலும் ஏகபோக வரவேற்பை பெற்ற வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படம் 7 நாளில் 50 கோடி வசூலை தட்டி தூக்கியதாகவும் சமீபத்தில் பட குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு குணா படத்தின் பாடல் தான் காரணம் என்று  கமலின் நெருங்கிய நண்பர் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். தற்போது எங்கு பார்த்தாலும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பேச்சுதான், அந்த அளவிற்கு இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றி வரும் 11 நண்பர்களில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால் அந்த காலத்தில் எந்த ஒரு வசதியும் இல்லாமலே கொடைக்கானலில் ஒரு ராட்சச குகையை கண்டுபிடித்து கமலஹாசன் குணா படத்தில் நடித்த நிலையில், அதெல்லாம் இப்போது கூட செய்வது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் பேசி உள்ளார்.

Also Read: 7 நாட்களில் இத்தனை கோடியா?. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்

குணா பிளாப் ஆனதற்கு தளபதி தான் காரணம்

இது மட்டுமல்ல இந்த படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம் பெற்றதும் தமிழகத்தில் இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது. இன்னிலையில் விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் ஆக 2k கிட்ஸ்களால் அறியப்பட்ட நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதி தான் குணா படத்தை  இயக்கி இருக்கிறார் என்பதையே மஞ்சும்மல் பாய்ஸ் ஹிட் அடித்த பிறகு தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சந்தான பாரதி சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த படம்  60 கோடி வசூலை எட்டி இருப்பதற்கு காரணம் குணா படத்தில் இடம்பெற்ற பாடலை சரியான இடத்தில் இயக்குனர் வைத்தது தான் காரணம். அந்த காலத்தில் குணா படம் ஏன் ஓடவில்லை என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்துடன்  குணா படத்தை கிளாஸ் விட்டதால்தான், அந்தப் படம் பிளாப் ஆனது என்று உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்தார்.

மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், குணா படு தோல்வியை சந்தித்தது. ஆனால் கமலஹாசனின் முயற்சிக்கு பல ஆண்டுகள் கழித்து தற்போது பலன் கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோசம் என்று சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.  

Also Read: நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்