கமல் தயாரிப்பில் நடிக்கப் போகும் 3 சீசன் 7 போட்டியாளர்கள்.. வனிதா கனவு வீண் போகல

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு நிறைய இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் நடிக்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞனின் டாடா படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய கமல், தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் பணியாற்றலாம் என உறுதியும் கொடுத்திருந்தார்.

கமல் நடிக்கும் படங்களும், பிக் பாஸ் நிகழ்ச்சியும் வேறு வேறு இல்லை என்பது போல் தான் இருக்கிறது. அவருடன் படங்களில் நடித்த ஒரு சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறார். அதே போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கொடுக்கிறார். கமல் நடித்து, தயாரித்த விக்ரம் படத்தில் கூட சிவானி நாராயணனுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

Also Read:மீண்டும் வாய்ப்பு கொடுத்தும் மிக்சர் தின்னும் 2 பேர்.. என்ன பிக் பாஸ் இதெல்லாம்?

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 முடிவதற்குள், அதில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருப்போம் மூன்று பேருக்கு அடுத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பட வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் கமல். அட, இந்த சீசனே எதற்கு என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதிலிருந்து மூன்று பேருக்கு பட வாய்ப்பு கொடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

கமல் வாய்ப்பு கொடுக்கப் போகும் மூன்று போட்டியாளர்கள்

மாயா கிருஷ்ணன் ஏற்கனவே கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் தன்னால் முடிந்த வரை எல்லா இடத்திலும் பணியாற்றி வருகிறார். பிக் பாஸ் முடித்த கையோடு இவர் கமலஹாசனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை நடிகை அர்ச்சனாவும் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரெகமெண்டேஷனில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. அது மட்டுமில்லாமல் விளையாட்டின் ஆரம்பத்திலேயே உள்ளே வர வேண்டியவர், வைல்ட் கார்டு போட்டியாளராக தான் வருவேன் என சேனல் மூலம் உள்ளே வந்தவர். அடுத்து சினிமா வரை வளர இருக்கிறார்.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா எதன் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார் என்றே தெரியவில்லை. அதற்குள் அவருக்கு சினிமா வாய்ப்பும் கொடுக்க இருக்கிறார் கமல். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் வனிதா என் மகள் கண்டிப்பாக த்ரிஷா, நயன்தாரா போல ஒரு நாள் பெரிய நடிகையாக வருவார் என்று சொல்லி இருந்தார். சீக்கிரத்தில் அது உண்மையாகிவிடும் போல.

Also Read:அடுத்த ரெட் கார்டு பிளானில் சிக்கிய முத்தின மூஞ்சி.. நியாயமே இல்லாமல் உருட்டும் சூனியக் கிழவி