அடுத்த ரெட் கார்டு பிளானில் சிக்கிய முத்தின மூஞ்சி.. நியாயமே இல்லாமல் உருட்டும் சூனியக் கிழவி

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்ட் என்பது இப்போது பிரேக்ஃபாஸ்ட் போல ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்புங்கள் என ஒவ்வொரு போட்டியாளர்களும் சொல்லும் அளவுக்கு அதற்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இது எல்லாத்துக்கும் சகுனி போல் சோழி உருட்டியது மாயா தான். அடுத்து அதே வேலையை இன்றைய எபிசோடில் ஆரம்பித்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பயங்கர பிளானோடு உள்ளே வந்த மாயாவுக்கு, பார்வையாளர்கள் காரணமே இல்லாமல் பிரதீப் ஆண்டனிக்கு கைதட்டுவது பொறாமையாக இருந்தது. அவருக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு நேரம் பார்த்து காத்திருந்தார் மாயா. குருவி ஒக்கார பனம்பழம் விழுந்த கதையாக கூல் சுரேஷ் பிரச்சனை வரவே, உரிமை குரல் எழுப்பினார்கள் ஏஜென்ட் டீம்.

Also Read:60 நாட்கள் கழித்து சரியான பாயிண்ட்டை பேசிய டைட்டில் வின்னர்.. ஜகா வாங்கிய அர்ச்சனா

பிரதீப்பை வெளியே அனுப்பியதும் இனி ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் நாம்தான் என நினைத்துக் கொண்டிருந்த மாயா மற்றும் பூர்ணிமா தலையில் இடி விழுவது போல் உள்ளே வந்தவர் தான் தினேஷ். ஆரம்பத்தில் அவரை சாதாரணமாக எடை போட்டாலும், வார வாரம் ஆடியன்ஸ்கள் அவருக்கு கொடுக்கும் வரவேற்பு மாயாவை கலங்கடிக்க செய்திருக்கிறது.

அடுத்த ரெட் கார்டுக்கு போட்டிருக்கும் பிளான்

பிக் பாஸ் வீட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து இருப்பது போல் கைகளில் கயிறு கட்டப்படுகிறது. அப்படித்தான் கீரியும் பாம்புமாக சீண்டிக் கொண்டிருந்த விஷ்ணு மற்றும் அர்ச்சனா கையில் கயிறு கட்டி விட்டார்கள். அதேபோன்று இன்று மணி, தினேஷ், மாயா மூவரையும் சேர்த்து கைகளில் கயிறு கட்டி விடப்பட்டது. பூரணி மாவை பெரிய மனமில்லாத மாயா பாத்ரூம் போகிறேன் என காரணம் சொல்லி அடிக்கடி கயிறை அவுத்துவிட்டு போய்க் கொண்டிருந்தார்.

இந்த பிரச்சனையை இந்த வார கேப்டனான நிக்சனிடம் கொண்டு போனார்கள். அவர் மூன்று பேரையும் சமாதானம் செய்து கயிறை மீண்டும் கைகளில் கட்ட சொன்னார். தினேஷ் தன் கைப்பக்கம் இருக்கும் மாயாவின் கைகளில் இருக்கும் முடிச்சு லூசாக இருந்ததால் அவர் கொஞ்சம் அதை டைட் செய்தார். இதில் அவரின் கை கூட மாயா மீது படவில்லை.

ஆனால் மாயா, தினேஷ் தவறான உள்நோக்கத்துடன் அவரை தொட்டது போல் மிகப்பெரிய ட்ராமா செய்து கொண்டிருக்கிறார். என்னை தொடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, ஹராஸ்மென்ட் செய்கிறீர்கள் என்று தேவையில்லாமல் பேசி விஷயத்தை பெருசாக்குகிறார். அடுத்த ரெட் கார்டுக்கு மாயா பிளான் போட்டிருப்பது நன்றாக தெரிகிறது.

Also Read:அவமானத்திற்கு அஞ்சி கூனி குறுகும் பூர்ணிமா.. புலம்ப விட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்