மீண்டும் வாய்ப்பு கொடுத்தும் மிக்சர் தின்னும் 2 பேர்.. என்ன பிக் பாஸ் உங்க கண்ணுக்கு இது தெரியலையா?

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எத்தனையோ பேர் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அதில் ஒரு சிலருக்கே இந்த வாய்ப்பு அமைகிறது. கிடைத்த வாய்ப்பை எல்லோரும் சரியாக பயன்படுத்துகிறார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான். எதற்கு வந்தோம் என்று தெரியாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் சும்மாவே இருந்து விட்டு வெளியே போனவர்கள் நிறைய பேர்.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை எலிமினேட் ஆகி வெளியே சென்றவர்கள் மீண்டும் போட்டியாளர்களாக உள்ளே வந்தது இல்லை. மூன்றாவது சீசனில் வனிதா விஜயகுமார் உள்ளே வந்திருந்தாலும், அவரை போட்டியாளராக எடுத்துக் கொள்ளாமல் தான் வைத்திருந்தார்கள். ஆனால் இந்த சீசனில் பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே வந்த விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் போட்டியாளர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்.

மிக்சர் தின்னும் 2 போட்டியாளர்கள்

அனன்யா ராவ் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன போட்டியாளர். அவரைப் பற்றி மக்கள் சரியாக தெரிந்து கொள்வதற்கு முன், வெளியேற்றப்பட்டு விட்டார் என்று பரவலாக ஒரு கருத்து இருந்தது. சரி, இப்போது மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த போது அனன்யா ராவ் உள்ளே சென்று என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

Also Read:அடுத்த ரெட் கார்டு பிளானில் சிக்கிய முத்தின மூஞ்சி.. நியாயமே இல்லாமல் உருட்டும் சூனியக் கிழவி

அதேபோல விஜய் வர்மா எலிமினேட் ஆகி வெளியில் சென்ற நிலையில், அவர் உள்ளே இருந்திருந்தால் பயங்கரமாக விளையாடி இருப்பார் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியது. ஒரு வேளை பிரதீப் ஆண்டனியுடன் அந்த பிரச்சனை ஏற்படாமல் இருந்து, அவர் விளையாடியிருந்தால் டைட்டில் வின்னர் கூட ஆகி இருக்கலாம் என்று பில்டப் கொடுக்கப்பட்டது.

பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே வந்த விஜய் வர்மா ஏகத்துக்கும் பில்டப் மேல் பில்டப் ஏற்றினார். உங்கள் ஒவ்வொருவருடைய ஸ்டேட்டஜியையும் உடைத்து காட்டுகிறேன் என்று சவால் விட்டார். ஆனால் இந்த ஒரு வாரமாக விஜய் வர்மா வீட்டிற்குள் எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மாயா மற்றும் பூர்ணிமாவை போல் நெகட்டிவ் கண்டன்ட் கொடுத்து கூட விளையாடுபவர்களை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இப்படி ஓரமாக உட்கார்ந்து கொண்டு மிக்சர் சாப்பிடுபவர்களை எந்த கணக்கில் சேர்க்க முடியும். பூகம்பம் டாஸ்க் மூலம் வீட்டிற்குள் வந்தவர்கள் ஒரு சின்ன அதிர்வலையை கூட ஏற்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கூட சரியில்லாத விஷயம்.

Also Read:60 நாட்கள் கழித்து சரியான பாயிண்ட்டை பேசிய டைட்டில் வின்னர்.. ஜகா வாங்கிய அர்ச்சனா