கமல், பிரபாஸின் விஷுவல் ட்ரீட் ஒர்க் அவுட் ஆனதா.? கல்கி 2898 AD முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Kalki 2898 AD Collection: உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட கல்கி 2898 AD நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசன் நடித்துள்ளனர். அதனாலயே இப்படம் இப்போது அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மொத்த படத்தையும் ஸ்கோர் செய்து விட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் இரண்டு காட்சிகளில் வந்தாலும் கமலின் தோற்றமும், பார்வையும், குரலும் மிரட்டலாக இருப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் தன்னுடைய நான்கு வருட கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெற்றுள்ளார். அதே போல் ஆடியன்ஸும் புது அனுபவத்தை பெற்றுள்ளனர். இப்படியாக கொண்டாடப்படும் இப்படத்தின் வசூலும் தற்போது லாபகரமாக அமைந்துள்ளது.

அதன்படி கல்கி 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிரீ பிசினஸ் பொருத்தவரையில் சேட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமம், தியேட்டர் உரிமம் என அனைத்தும் சேர்த்து 390 கோடியாக இருக்கிறது.

கல்கி பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

அதேபோல் ஓவர் சீஸ் விநியோக உரிமை 80 கோடியாக இருக்கிறது. மேலும் டிக்கெட் முன்பதிவு அமெரிக்காவில் மட்டுமே 1.2 கோடியை நெருங்கியிருந்தது. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இப்படி ரிலீசுக்கு முன்பே லாபம் பார்த்த கல்கி படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடியாக இருக்கிறது. அதில் இந்திய அளவில் இப்படம் 115 கோடியை வசூலித்துள்ளது. ஓவர் சீஸ் பொருத்தவரையில் 65 கோடி வசூல் ஆகியுள்ளது.

இன்னும் விரிவாக பார்க்கையில் தெலுங்கில் 64.5 கோடிகளும் தமிழில் 4 கோடிகளும் வசூல் ஆகி இருக்கிறது. மேலும் ஹிந்தியில் 24 கோடிகளும் கர்நாடகாவில் 0.3 கோடிகளும் மலையாளத்தில் 2.2 கோடிகளும் வசூலித்துள்ளது.

இப்படியாக முதல் நாளிலேயே இறங்கி ஆடி இருக்கும் கல்கி அடுத்தடுத்த நாட்களில் வசூலில் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த பிரம்மாண்டக் கூட்டணி கொடுத்த பில்டப்புக்கு குறை வைக்கவில்லை.

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் கல்கி 2898 AD

Next Story

- Advertisement -