பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம் நெல்சனா இல்ல விஜய்யா.? சிதர் தேங்காய் போல உண்மையை உடைத்த கலாநிதி மாறன்

அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரிலீஸான 7 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து வருகிறது. இதனிடையே ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குவதற்கு முன்பாக இவர் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை. காரணம் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படத்தின் படுதோல்விதான்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அனிரூத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இப்படத்தில் ஹிட்டான நிலையில், ஹலமதி ஹபீபு பாடல் உலகமெங்கும் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் கதையானது, பொதுமக்கள் கூடியிருக்கும் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து இந்திய அரசையே பிளாக் மெயில் செய்துவருவார்கள்.

Also Read: 9வது நாளில் மந்தமான ஜெயிலர் வசூல்.. 500 கோடியை நெருங்க தடுமாறும் டைகர் முத்துவேல் பாண்டியன்

இதனிடையே இந்த மாலில் பொதுமக்களோடு சிக்கிக்கொள்ளும் ராணுவ வீரரான விஜய், எப்படி அங்குள்ளவர்களை காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. இதனிடையே பீஸ்ட் படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்று பெருந்தோல்வியை அடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சனின் கேரியரும் கேள்விக்குறியான நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். மேலும் இத்திரைப்படத்தின் வெற்றி நெல்சனின் கேரியரை உச்சாணிக்கு ஏற்றியுள்ளது.

இதனிடையே, அண்மையில் ரஜினிக்கு ஜெயிலர் படத்தில் கொடுத்த வெற்றியை ஏன் விஜய்க்கு பீஸ்ட் படத்தில் கொடுக்கவில்லை என நெல்சனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பீஸ்ட் படத்தை எடுக்கும்போது இத்தனை நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்ததாகவும், ஆறு, ஏழு மாதங்கள் நேரம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக பீஸ்ட் படத்தை சற்று தரம் உயர்த்தி வெளியிட்டிருப்பேன் என நெல்சன் பதிலளித்தார்.

Also Read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

ஆனால் அப்போது பேசிய அவர், இப்படத்தின் தோல்விக்கான உண்மையான காரணம் யார் என்று அவர்களது பெயரை கூறியிருக்கமாட்டார். இதனிடையே பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட இரண்டு படங்களையும் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனரான கலாநிதிமாறன், பீஸ்ட் படத்தின் தோல்விக்கான காரணம் யார் என கூறியுள்ளார்.
முதலில் பேசிய அவர், ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வர வேண்டும் என்று நெல்சனுக்கு நாங்கள் தான் நெருக்கடி கொடுத்தோம்.

நெல்சனும் சரி என்று வேக வேகமாக படத்தை முடித்தார். அப்பொழுது கேஜிஎப் 2 படமும் வெளிவந்த சமயம், பீஸ்ட் படத்தை வெளியிட வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதை கேட்காமல், இப்படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை நெல்சனுக்கு கொடுத்ததால் தான் படம் தோல்வியடைந்தது என கலாநிதிமாறன் வெளிப்படையாக பேசியிருந்தார். மேலும் பேசிய அவர் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு நாங்கள் தான் காரணம் என கூறிய அவர், நடிகர் விஜய்க்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

Next Story

- Advertisement -