ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

Ajith In Vidamuyarchi: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று கோலாகலமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினி படங்களில் இல்லாத வரவேற்பும், வசூலும் இப்படத்திற்கு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் இப்படக்குழு மொத்தமும் வெற்றியடைந்து விட்டது.

முக்கியமாக நெல்சன் தோற்று விட்டார், அவ்வளவுதான் இவருடைய முயற்சி என்று பலரும் அவதூறாக பேசிய நிலையில் அதையெல்லாம் தகர்த்து எறிந்து வெற்றி இயக்குனராக நிரூபித்து விட்டார். அந்த வகையில் இப்படத்தில் நடித்த அனைத்து ஆர்டிஸ்ட்களுக்கும் அவர்களுடைய முழு நடிப்பையும் போட்டு வெற்றியடைய செய்திருக்கிறார்கள்.

Also read: கடைசி 5 படங்களில் ரஜினி குவித்த கோடிகள்.. ஷங்கர் பட கலெக்சனை தூக்கி சாப்பிட வைத்த நெல்சன்

முக்கியமாக விநாயகம் மற்றும் சிவராஜ் குமார் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது. இப்படி அனைத்து மொழியில் உள்ள பிரபலங்களை வைத்து முக்கியமான காட்சிகளில் நடிக்க செய்து வெற்றியை பார்த்து விட்டார்கள். இதே மாதிரியே தற்போது வருகிற அனைத்து படங்களும் ஃபாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தில் நடித்த சிவராஜ்குமார் தமிழில் பெரிதும் கவனத்தை இவர் பக்கம் திருப்பிக் கொண்டார்.

மேலும் தற்போது இவர் அளித்த பேட்டியில் என்னுடைய ஆசை எப்படியாவது அஜித்துடன் நடித்து ஆக வேண்டும். அவருடைய நடிப்பையும், அவரின் செயல்களையும் நான் வியந்து பார்க்கிறேன். சாதாரண மனிதனாக பைக் ரைடு போய்க்கொண்டிருக்கிறார். அதே மாதிரி சினிமாவிலும் எதார்த்தமான நபராக இருக்கிறார். அதனால் அவருடன் சேர்ந்து நடிப்பது தான் என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார்.

Also read: உங்க சவகாசமே வேண்டாம்னு அஜித் எடுத்த முடிவு.. மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் செய்த துரோகம்

இப்படி இவருடைய ஆசையை கூறியது எல்லாம் ஓகே தான், ஆனால் அதற்காக அஜித் மற்றும் மகிழ் இவருக்கு போன் பண்ணி விடாமுயற்சியில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சிவராஜ்குமார் மிக சந்தோசத்தில் இருக்கிறார். எப்படி ரஜினி இவர்களை வைத்து வெற்றியை காட்டினாரோ, அதையே ஃபாலோ செய்கிறார் அஜித்.

இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்திற்கான ஒவ்வொரு விஷயங்களும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அஜித், திரிஷா மற்றும் சிவராஜ் குமார் உறுதியாகிவிட்டார்கள். இனி இப்படம் தாறுமாறாக ரசிகர்கள் விருப்பப்படி மிக மும்மரமாக செயல்பட போகிறது. இனிமேல் தான் அஜித்தின் ஆட்டமே ஆரம்பமாகப் போகிறது என்பதற்கு ஏற்ப விடிவு காலம் பிறந்து விட்டது.

Also read: அஜித் வரிசையில் மாட்டிக்கொண்ட ரஜினி.. வெற்றி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத நிலை

Next Story

- Advertisement -