ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிப்பாரா?. அவரே சொன்ன பளிச் பதில்

Adhi Gunasekaran: சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சினிமா பிரபலங்களில் சிலர் இழப்பு ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி தான் ஆதி குணசேகரனாக வாழ்ந்த மாரிமுத்துவின் இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.

அவர் இல்லாமல் எதிர்நீச்சல் தொடரை எப்படி பார்ப்பது என ரசிகர்கள் கண்ணீர் மல்க கூறி வருகிறார்கள். இந்நிலையில் சன் டிவியின் டிஆர்பியில் முதல் இடத்தை வகித்து வந்த எதிர்நீச்சல் தொடருக்கு இப்போது குணசேகரன் இழப்பு பேரிடியாக அமைந்திருக்கிறது. அடுத்த குணசேகரனாக நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது.

Also Read : இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

இது குறித்து தற்போது வேல ராமமூர்த்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் மாரிமுத்து தன்னுடைய நெருங்கிய நண்பர் அவருடன் நானும் ஒரு படத்தில் பயணித்திருக்கிறேன் என தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாரிமுத்து இறந்த அன்று மதியமே குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்த பொருத்தமானது நான்தான் என்ற பேச்சை தொடங்கிவிட்டது.

அப்போதே சன் டிவி தொலைக்காட்சியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் வேல ராமமூர்த்தி கூறியிருக்கிறார். ஆனால் இப்போது படங்களில் தான் மிகவும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறேன். நான் வீட்டுக்கு போயே 20 நாள் ஆச்சு. இப்படி நெருக்கடியான சூழலில் நான் இருந்து வரும் நிலையில் இன்னும் இது குறித்து முடிவு எடுக்கவில்லை.

Also Read : இயக்குனராக ஜெயிக்க முடியாமல் போன மாரிமுத்து.. எடுத்த மூன்று படங்களில் தோல்வியை கண்ட 2 படம்

அதுவும் இதற்கு முன்னதாக சீரியலில் நடித்து தனக்கு எந்த அனுபவமும் இல்லை. மேலும் என்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ள முக்கிய நபர்களும் நீங்கள் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் தயவு செய்து விட்டு விடாதீர்கள் என்று கூறினார்கள்.

இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்து வருகிறது ஆனால் இன்னும் உறுதியாக வில்லை. எனக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் மாரிமுத்துவின் இடத்தை என்னால் நிரப்ப முடியுமா என்பது சந்தேகம் தான் என வேல ராமமூர்த்தி கொடுத்துள்ள பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read : மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

- Advertisement -

Trending News