நடிப்பு ராட்சசியின் மலையாள ரீ என்ட்ரி.. அரசியலும், காதலும் கலந்த காதல் தி கோர் ட்ரெய்லர் விமர்சனம்

Kaathal The Core Trailer: நடிகை ஜோதிகா 2009 ஆம் ஆண்டு ஜெயராமுடன் நடித்த சீதா கல்யாணம் என்னும் படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு காதல் தி கோர் என்னும் படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்தில் கொடுக்கிறார். இந்த படம் வரும் 23ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்தார். பல நடிகைகளுக்கும் ரீஎன்ட்ரி என்பது தோல்வியில் முடிய, ஜோதிகா அதில் வெற்றியடைந்து இருக்கிறார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

காதல் தி கோர் படத்தின் டிரைலர் மம்மூட்டியின் பின்னணி குரலில் தொடங்குகிறது. அவருடைய போட்டோவை ஜோதிகா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மம்மூட்டியின் குரலில் அவருடைய பெயர் மேத்யூ தேவசி எனவும், அவர் மூன்றாவது வார்டு தேர்தலில் போட்டியிடுவதாகவும் சொல்கிறார். அவர் அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்படுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Also Read:சிகரெட் பிடிப்பதில் ரஜினியை மிஞ்சிய 5 ஹீரோயின்கள்.. போட்டோவுடன் சிக்கிய நயன்

ஒரு தனி மனிதன் தேர்தலில் நிற்கும் பொழுது அவனுக்கும், அவனை சார்ந்தவருக்கும் ஏற்படும் பிரச்சனை பற்றி படம் சொல்வது போல் தெரிகிறது. தேர்தலில் போட்டியிட இருக்கும் மம்மூட்டி ஏதோ ஒரு வழக்கில் சிக்கிக் கொள்வது போல் சில காட்சிகள் இருக்கின்றன. ட்ரெய்லரில் ஜோதிகாவிற்கு பேரளவுக்கு கூட ஒரு வசனம் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

மம்மூட்டி தனக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்கிறார். ஆனால் படத்தில் ட்ரெய்லர் காட்சியில் டைட்டிலுக்கு ஏற்ப காதல் காட்சிகள் ஒன்று கூட இல்லை. ட்ரெய்லரும் திரில்லர் படம் போல் ரொம்பவும் அமைதியாக, சுற்றி ஏதோ பயங்கர பிரச்சனை நடப்பது போலவும் தான் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்னும் படத்தின் மூலம் வைரலான இயக்குனர் ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் மம்மூட்டி மற்றும் ஜோதிகாவிற்கு காதல் காட்சிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்மூட்டி தயாரித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:ஜிப்பு போட மறந்ததெல்லாம் ஒரு குத்தமா.? கமலுடன் பிந்து மாதவி புகைப்படத்தை வறுத்தெடுக்கும் பிரதீப் ஆர்மி