கே.எஸ் ரவிக்குமார் அதிக லாபம் பார்த்த படம்.. ஆனாலும் இரண்டே படத்தால் க்ளோஸான கேரியர்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை புதுப்புது ட்ரெண்டில் எடுக்கக்கூடிய இயக்குனர் என்றால் அது கேஎஸ் ரவிக்குமார் தான். இவர் இயக்கத்தில் வந்த படங்கள் என்றும் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக பல படங்களை இயக்கியிருக்கிறார். பெரிய முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

அதிலும் இவர் இயக்கத்தில் அதிக லாபத்தை கொடுத்த படம் என்றால் நாட்டாமை, அவ்வை சண்முகி, முத்து,படையப்பா, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற வரிசையில் அதிகமான படங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்த படங்களில் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.

Also read: கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் அதிகம் நடித்த நடிகர் யார் தெரியுமா? பாதி வருஷம் இவர் கூடவே போச்சி

அப்படிப்பட்ட இயக்குனர் இவருக்கு சில படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது.
இவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என்று சொன்னால் அது முத்து குளிக்க வாரீகளா. இப்படம் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையாமல் இவருடைய சினிமா கேரியருக்கு ஒரு இறங்கு முகமாக இப்படம் அமைந்து விட்டது.

பின்பு அடுத்தடுத்த படங்களில் ஒவ்வொரு விஷயங்களையும் நிதானமாக யோசித்து கதைகளை இயக்கி வெற்றி படத்தை கொண்டு வந்தார். பின்பு 2014ஆம் ஆண்டில் ரஜினியை வைத்து லிங்கா திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்து. அத்துடன் கேலி கிண்டலுக்கு இப்படம் தள்ளப்பட்டது.

Also read: குஷ்புக்காக கதையவே மாற்றிய கே.எஸ்.ரவிக்குமார்.. மாஸ் ஹிட்டான படம் தெரியுமா.?

இந்த படத்திற்குப் பிறகு தமிழில் எந்த படங்களையும் இயக்காமல் இப்பொழுது வரை வருந்தி கொண்டிருக்கிறார். அதனால் இயக்குனர் என்ற பாதையில் இருந்து மாற்றிக்கொண்டு சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். பின்பு இவர் கூகுள் குட்டப்பா என்ற படத்திற்கு தயாரிப்பாளராக ஆனார். ஆனால் அந்த படமும் இவருக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை.

ஒரு காலத்தில் பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுத்த இவரால் தற்பொழுது இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி படங்களை இயக்க முடியாமல் இருக்கிறார். அந்த இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் இவரது சினிமா கேரியரை க்ளோஸ் ஆகிவிட்டது. இப்பொழுது இவருக்கு வந்த வாய்ப்பை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

Also read: 20 வருடங்களுக்குப் பிறகு களத்தில் குதித்த கே.எஸ்.ரவிக்குமார்.. சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக், ஆடிப்போன கோலிவுட்

Next Story

- Advertisement -