Connect with us
Cinemapettai

Cinemapettai

ravikumar-android

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 வருடங்களுக்குப் பிறகு களத்தில் குதித்த கே.எஸ்.ரவிக்குமார்.. சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக், ஆடிப்போன கோலிவுட்

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த இயக்குனர் தான் கே எஸ் ரவிக்குமார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தமிழில் கடைசியாக இயக்கிய படம்தான் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’.

தற்போது தமிழில் மீண்டும் கே எஸ் ரவிக்குமார் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25” என்ற சூப்பர் ஹிட் படத்தை கே எஸ் ரவிக்குமார் தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் வேலைக்கு செல்லும் தந்தையை பார்த்துக்கொள்ள ரோபோவை நியமிக்கும் மகன், இதனால் தந்தைக்கும், ரோபோவிற்கும் இடையே ஏற்படும் பாசப்பிணைப்பு போன்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தை தான் தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம் கேஎஸ் ரவிக்குமார்.

இந்த படத்தை தயாரிக்க தான் உள்ளாராம். இயக்கப்போவது அவருடைய உதவி இயக்குனர்கள் தான் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு வெளியான “தெனாலி” படத்தை அடுத்து 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்.

மேலும் இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவுவதோடு மட்டுமல்லாமல், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

android-kunjappan-cinemapettai

android-kunjappan-cinemapettai

Continue Reading
To Top