மாமனார் வீட்டோடு அப்படி என்ன பிரச்சனை.? மும்பை போன பிறகு மொத்தமாக மாறிய ஜோ

Jyothika: ஜோதிகா மும்பையில் இருந்து தமிழில் நடிக்க வந்து முன்னணி அந்தஸ்தை பிடித்தார். பிரபலமாக இருக்கும்போதே சூர்யாவை காதலித்து பல போராட்டத்திற்கு பின் திருமணமும் செய்து கொண்டார்.

தமிழ்நாட்டு மருமகளாக மாறிய பிறகு குடும்பம் குழந்தை என சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்க வந்து தற்போது பிஸியாக மாறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென சூர்யா குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சிவக்குமாருக்கும் இவர்களுக்கும் கருத்து வேறுபாடு என கிசுகிசுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் அவர்கள் மும்பை போனது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் சிறிது காலம் தான் மும்பையில் இருப்போம். அதன் பிறகு தமிழ்நாட்டுக்கே வந்து விடுவோம் என ஜோதிகா ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

சென்னையை மறந்த ஜோதிகா

ஆனால் அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு என தற்போது தெரியவந்துள்ளது. அதாவது சூர்யா தன் தம்பி மற்றும் அப்பா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிக்கலாம் என பிரம்மாண்ட வீடு ஒன்றை சென்னையில் கட்டி இருக்கிறார்.

அதில் ஒன்றாக இருக்கலாம் என நினைத்த சமயத்தில் தான் இவர்கள் மும்பை பக்கம் சென்றிருக்கின்றனர். ஆனால் சூர்யா சென்னை வரும் போது தன் வீட்டில் தான் தங்குவதாக செய்திகள் கசிந்தது.

தற்போதைய தகவலின்படி ஜோதிகா சென்னை வந்தாலும் ஹோட்டலில் ரூம் புக் செய்து தான் தங்குகிறாராம். இப்படி ஒரு விஷயம் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இருப்பினும் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அப்படி என்றால் சிவக்குமாருக்கும் இவருக்கும் பிரச்சனை என்று வந்த செய்திகள் உண்மை தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் தேர்தல் சமயத்தில் ஜோ ஓட்டு போட வராததற்கு கூட இதுதான் காரணமா என்ற யூகமும் கிளம்பி இருக்கிறது. ஆனால் இது வதந்தியாகவே இருக்கட்டும் என ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் இந்த சர்ச்சைக்கு சம்பந்தப்பட்டவர்கள் முற்றுப்புள்ளி வைத்தால் தான் சரியாக இருக்கும்.

சிவக்குமார் குடும்பத்தில் நடக்கும் கருத்து வேறுபாடுகள்

Next Story

- Advertisement -