சுதா கொங்காரா கூப்பிட்டும் மறுத்த இளம் ஹீரோ.. பட்டாசாய் தெறிக்கும் வாய்ப்பை விட்ட வாரிசு நடிகர்

இறுதிச்சுற்று, மித் மை பிரண்ட், சூரரை போற்று என எடுத்த படங்கள் எல்லாம் சுதா கொங்காரவிற்கு ஹிட் தான். இப்பொழுது சூர்யாவை வைத்து புறநானூறு என்று ஒரு படத்தை எடுக்க முயற்சித்து வருகிறார் ஆனால் அந்த படத்திற்கு சூர்யா இன்னும் பிடி கொடுக்காமல் இருக்கிறார்.

எப்பொழுதுமே ஆக்சன், உண்மை வரலாற்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சுதா கொங்காரா இந்த முறை ஒரு சுத்தமான காதல் கதையை எடுப்பதற்காக வளரும் ஹீரோ ஒருவரை நாடியுள்ளார். ஆனால் அந்த ஹீரோ வேறொரு படம் கமிட்டாகி நடித்து வருவதால் இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார்.

தற்சமயம் சுதா கொங்காராஅந்த ஹீரோவை கழட்டி விட்டு வேறு ஒரு இளம் புது முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். எடுக்கப் போவது காதல் படம் என்பதால் புது முகங்களோ அல்லது இளமையான ஹீரோக்கள் மட்டுமே வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

பட்டாசாய் தெறிக்கும் வாய்ப்பை விட்ட வாரிசு நடிகர்

சுதா கொங்காரா பட வாய்ப்பு பறிபோனது, நடிகர் விக்ரமின் தவப்புதல்வன் துருவ் விக்ரமுக்கு தான். அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் பாதி முடிந்து விட்டது அதனால் வேறு எந்த ஒரு புது படத்திற்கும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

அது மட்டும் இன்றி இந்தப் படம் ஒரு கபடி சம்பந்தப்பட்ட படம். இந்த படத்திற்கு “பைசன்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார் துருவ்விக்ரம். தூத்துக்குடியில் நடக்கும் கபடி போட்டிகள் பற்றிய கதை.

இந்த படத்திற்காக கட்டுமஸ்தான தனி உடல்வாகு வேண்டும். சுதா கொங்காராவின் காதல் படம் என்றால் அதற்கு வேறு ஒரு விதமான கெட்டப் வேண்டும். அதனால் மாரிசெல்வராஜ் இந்த படத்தை முடித்துவிட்டு வேறு படத்திற்கு நடிக்க செல்லுங்கள் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

Next Story

- Advertisement -