சீரியல் பேர்தான் சிங்க பெண்ணே, செட்டில் பெண்களுக்கு நடக்கும் அநீதி.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ

Singapenne: தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சிங்க பெண்ணே. இந்த சீரியல் சம்பந்தப்பட்ட ஆர்டிஸ்டுகள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவங்களுக்கு என்ன சினிமாக்காரங்க என வெளியில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளை பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. எதிர்த்து கேள்வி கேட்டால் அடுத்த வாய்ப்பு கிடைக்காதோ என்ற பயத்திலேயே வாயை திறக்காமல் இருந்து விடுகிறார்கள்.

சிங்க பெண்ணே என்ற சீரியலுக்கு பெயர் வைத்துவிட்டு இப்படி எல்லாம் செய்யலாமா என குமரி இருக்கிறார்கள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து பல இன்னல்களை சந்தித்து போராடும் பெண்ணின் கதை இது.

ஆனந்தி, அன்பு, மகேஷ் மூவருக்கும் இடையேயான முக்கோண காதல் கதையாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் கடந்த வார எபிசோடில் ஆனந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது அந்த கொண்டாட்டத்தில் நிறைய ஆட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஜூனியர் ஆர்டிஸ்ட்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வெளிவந்த அதிர்ச்சி வீடியோ

இவர்களுக்கு படப்பிடிப்பின் போது சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை. பெண் ஆர்டிஸ்ட்கள் கூட ரொம்பவே அவதிப்பட்டு இருக்கிறார்கள். மரியாதை கொடுக்காமல் கெட்ட வார்த்தையில் பேசுவது, இஷ்டம் என்றால் நடி இல்லை என்றால் கிளம்பு என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

இந்த ஷூட்டிங் முடிந்ததுமே அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் கள் ஒன்று கூடி அந்த ஸ்பாட்டில் நடந்ததை பற்றி வீடியோ போட்டுவிட்டார்கள். பெண்களுக்கு கருத்து ஊசி போடுவது போல் சீரியலை எடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆர்டிஸ்ட் மரியாதை கொடுக்காமல் நடத்துவது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story

- Advertisement -