சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஜோவிகா எனக்கு பொறந்த பொண்ணு இல்ல.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வனிதா

Vanitha Controversy: இதுவரை நான்கு திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருடைய மகள் ஜோவிகா இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களம் இறங்கி சவுண்ட் பார்ட்டியாக மாறிவிட்டார். ஏற்கனவே வனிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்போது தன்னுடைய மகளை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஜோவிகா ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் பரிச்சயம் ஆகி வருகிறார். இந்த சமயம் பார்த்து வனிதாவின் முன்னாள் கணவர் ராஜன் எனக்கு பிறந்த பிள்ளை ஜோவிகா இல்லை என சமீபத்தில் பேட்டி அளித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்பு சோசியல் மீடியாவில் ஜோவிகாவின் தந்தை யார் என்பது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்த நிலையில், இப்போது வனிதா அதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: பிக் பாஸுக்கு முன்பே வனிதா மகளுக்கு வந்த ஆஃபர்.. ஒரு ரவுண்ட் வர போகும் ஜோவிகா

வனிதா முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின்பு தான் ராஜன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அவரையும் விவாகரத்து செய்துவிட்டு அருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த மூன்று திருமணத்தின் போது தான் வனிதாவிற்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா, ஜெய்னிதா என இரண்டு மகள்களும் பிறந்தது. ஆனால் இப்போது வனிதாவின் 2வது கணவர் ராஜன், ‘ஜோவிகா என்னோட பொண்ணு கிடையாது’ என சொன்னதற்கு பதில் அளித்த வனிதா, இப்போது நான் ஆகாஷ் மற்றும் ராஜன் இருவருடனும் தொடர்பில்தான் இருக்கிறேன்.

Also Read: டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

இப்ப என்ன ஜோவிகா யாரோட பொண்ணு என்பது தானே உங்களுடைய பிரச்சனை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம், ஜோவிகா ஆகாஷின் மகள் தான். ஆனால் அவள் தன்னுடைய தந்தையின் பெயரை தன் பெயருக்கு பின்னால் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

இருப்பினும் அவரது பெயரை தான் இனிஷியல் ஆக ஜோவிகாவிற்கு வைத்திருக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். எதுக்காக இப்படி எல்லாம் சர்ச்சையை கிளப்புறீங்க, போய் அவங்கவங்க பிள்ளைக் குட்டிகளை படிக்க வைங்க, என்னுடைய வாழ்க்கையை விமர்சிப்பதை தான் வேலையா வச்சுக்காதீங்க என்றும் திட்டிவிட்டார்.

Also Read: ஆன்ட்டி வெறியனா இருப்பானோ.! மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்டு அசிங்கப்பட்ட சைக்கோ

- Advertisement -

Trending News