பிரபு சாலமனை வச்சு செய்த பத்திரிக்கையாளர்கள்.. செம்பி படத்தால் வந்த வினை

இயற்கை சார்ந்த படங்களை எடுப்பதில் பிரபு சாலமன் கைதேர்ந்தவர். அந்த வகையில் தற்போது அஸ்வின், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான செம்பி படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தையை பாட்டியாக கோவை சரளா வளர்த்து வருகிறார். அப்போது தனது பேத்திக்கு இழைக்கப்படும் அநீதிக்காக அவர் போராடுகிறார். நேற்று இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பிரபு சாலமன் பகிர்ந்து கொண்டார்.

Also Read : பேத்திக்காக 80 வயது கிழவியாக உருமாறிய கோவை சரளா.. செம்பி பிரிவியூ ஷோ விமர்சனம்

இந்நிலையில் படம் முழுக்க கிறிஸ்துவ மதத்தை பற்றி தான் பிரபு சாலமன் எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி படம் முடியும்போது இயக்குனர் பெயர் இடம் பெறும் இடத்தில் ஏசு என்று போடப்பட்டிருந்தது. ஆகையால் பிரபு சாலமனிடம் பத்திரிக்கையாளர்கள் கிடக்ககுடியான கேள்விகளை கேட்டு மடக்கினர்.

இந்த படத்தில் மதத்தை திணிக்கிறீர்களா, நீங்கள் என்ன இயேசுவா என தொடர்ந்து பிரபு சாலமனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு நான் சிறுவயதில் இருந்தே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்துள்ளேன். ஆனால் இந்த படம் கிறிஸ்துவ மதத்தை பற்றி அல்ல. அன்பை வெளிப்படுத்தும் படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Also Read : மேடையில் நடந்த அவமானத்தை உடைத்தெறிந்த 40 கதை அஸ்வின்.. செம்பி படம் பார்த்து கமல் கூறிய விமர்சனம்

படத்தை நீங்கள் தானே இயங்கினீர்கள் ஏன் இயேசு என்று போட்டீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு உங்கள் மனம் கஷ்டப்பட்டு இருந்தால் மன்னித்து விடுங்கள் என பிரபு சாலமன் கூறினார். மேலும் கடைசியில் செம்பி படம் ரொம்ப நல்லா இருப்பதாக பத்திரிகையாளர்கள் தங்களது கருத்துக்களையும் கூறியிருந்தனர்.

இதற்கு பிரபு சாலமன் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அஸ்வின் நடிப்பில் கடைசியாக வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்கப்படாத நிலையில் செம்பி படம் கண்டிப்பாக அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

- Advertisement -