Videos | வீடியோக்கள்
செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்
தேசிய விருதை பெற்றே தீருவேன் என்று ஆக்ரோஷமாக நடித்திருக்கும் கோவை சரளாவுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.
மைனா, கும்கி போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்த பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. இதற்கு ஒரே காரணம் கோவை சரளா மட்டும்தான்.
இதுவரை காமெடி காட்சிகளில் மட்டுமே கலக்கி வந்த கோவை சரளா ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் கலகலப்பும், நகைச்சுவையும் கலந்த கலவையாக தான் இருக்கும். அப்படிப்பட்ட கோவை சரளா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட செம்பியாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு தற்போது வெளியான டிரைலரே சிறந்த உதாரணமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லரில் அவர் நவரசத்தையும் பிழிந்து நடித்திருக்கிறார். ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு மலைப்பிரதேசம் தான் காட்டப்படுகிறது. இயல்பாகவே பிரபு சாலமன் திரைப்படத்தில் இப்படி இயற்கையின் அழகை காட்டும் பிரதேசங்கள் காட்டப்படும்.
அந்த வகையில் கோவை சரளா தன் பேத்தியுடன் மலைப்பகுதியில் வசித்து வருகிறார். அம்மா, அப்பா இறந்த அந்த குட்டி பெண் தன் ஆச்சியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப்பிணைப்பும், தன் பேத்திக்காக போராடும் கோவை சரளாவின் நடிப்பும் வியக்க வைத்திருக்கிறது.
Also read: மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் கோவை சரளா.. அந்த கேரக்டர் செலக்ட் பண்ணதுதான் மாஸ்
மேலும் இன்றைய அரசியலை குத்திக்காட்டும் வகையில் இருக்கும் வசனங்களும், பரபரப்பான காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தம்பி ராமையா, அஸ்வின் போன்ற கதாபாத்திரங்களும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதற்கு முன்பு அஸ்வின் ஹீரோவாக நடித்த திரைப்படத்தின் மூலம் பயங்கரமாக கலாய்க்கப்பட்டார்.
அந்தப் பெயரை போக்கும் வகையில் அவர் இந்த படத்தின் மூலம் அதிக கவனம் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் தேசிய விருதை பெற்றே தீருவேன் என்று ஆக்ரோஷமாக நடித்திருக்கும் கோவை சரளாவுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் நிறைந்து இருக்கிறார். அந்த வகையில் பிரபு சாலமன் மற்றும் ஓர் சிறந்த படைப்பின் மூலம் நம்மை கவர்வதற்கு தயாராகி விட்டார். வரும் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் இப்போதே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
