பேத்திக்காக 80 வயது கிழவியாக உருமாறிய கோவை சரளா.. செம்பி பிரிவியூ ஷோ விமர்சனம்

மைனா, கும்கி, கயல் போன்ற அற்புதமான படைப்புகளை கொடுத்த பிரபு சாலமன் தற்போது செம்பியின் மூலம் களமிறங்கியுள்ளார். கோவை சரளா, தம்பி ராமையா, அஸ்வின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இன்று அந்த படத்தின் பிரிவியூ ஷோ நடைபெற்றுள்ளது. தற்போது படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கதைப்படி கோவை சரளா தன் 10 வயது பேத்தியுடன் மலைப்பகுதியில் வசித்து வருகிறார். அங்கு காடுகளில் இருக்கும் விறகுகளை பொறுக்கி விற்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அப்பொழுது ஒரு நாள் காட்டுக்குச் சென்ற கோவை சரளாவின் பேத்தியை மூன்று பேர் உடல்ரீதியாக பலவந்தப்படுத்துகின்றனர். கொடூரமாக பாதிக்கப்பட்ட தன்னுடைய பேத்தியை அரவணைத்துக் கொள்ளும் கோவை சரளா அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி தர முயற்சி செய்கிறார்.

அவருக்கு உதவுவது போல் வரும் போலீஸ் அதிகாரி பணத்தை கொடுத்து இந்த பிரச்சனையை முடித்து வைக்க பார்க்கிறார். இதனால் வெறிகொண்ட வேங்கையாக மாறும் கோவை சரளா தன் பேத்திக்கு நியாயம் வாங்கி கொடுக்கிறாரா, இல்லையா என்பதுதான் செம்பி படத்தின் கதை. இதுவரை கோவை சரளாவை வெறும் காமெடி நடிகையாக மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த படம் ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கிறது.

Also read: மேடையில் நடந்த அவமானத்தை உடைத்தெறிந்த 40 கதை அஸ்வின்.. செம்பி படம் பார்த்து கமல் கூறிய விமர்சனம்

உங்களை சிரிக்க வைக்க மட்டுமல்ல அழ வைக்கவும் முடியும் என்ற வைராக்கியத்துடன் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார் கோவை சரளா. 80 வயது கிழவியாக அவர் நியாயத்திற்காக போராடும் ஒவ்வொரு காட்சியும் சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு துணையாக வழக்கறிஞராக வரும் அஸ்வின் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். இதற்கு முன்பு அவரை பலரும் கேலி செய்ததினால் இதில் கொஞ்சம் அவர் கவனத்துடன் நடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

அந்த வகையில் அவருடைய நடிப்பு பலருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பத்து வயது செம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். இப்படி படத்தில் குறை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லாத வகையில் பிரபு சாலமன் அற்புதமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

Also read: செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் கச்சிதமாக பொருந்தி போகிறார்கள். அந்த வகையில் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கோவை சரளாவுக்கு இந்த திரைப்படம் அவருடைய திரை வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோன்று இப்படத்திற்கு பிறகு அஸ்வினுக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விடும். அந்த வகையில் வருட இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்த செம்பி அனைவருக்கும் கொடுத்திருக்கிறது. நாளை இந்த படத்துடன் த்ரிஷாவின் ராங்கி, ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா, சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்கள் மோதுகிறது. இந்த ரேஸில் யார் வெல்ல போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து காண்போம்.

Also read: தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்