வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சுக்கு நூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. ஜீவாவை தொடர்ந்து தலை முழுகிய அடுத்த தம்பி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது சுவாரஸ்யமான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள எல்லோரும் தனித்தனியாக மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் வைத்த நிலையில் ஜீவா பெயர் மட்டும் இடம்பெறாததால் திருமண மண்டபத்திலேயே பூதாகர சண்டை வெடிக்கிறது.

இதனால் உச்சகட்ட கோபத்திற்கு உள்ளான ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் தான் பட்ட கஷ்டங்களை மொத்த குடும்ப முன்பு போட்டு உடைக்கிறார். மேலும் இனி உங்களுடன் வரமாட்டேன் என்று கூறி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை தலை முழுகிவிட்டார். அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணமாக இருந்த குடும்பம் இப்போது சுக்கு நூறாக உடைந்துள்ளது.

Als0 Read : குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்.. ஜான்சிராணி இடம் சிக்குவாரா?

மேலும் வீட்டுக்கு வந்தும் இந்த சண்டை ஓயாமல் பிரளயத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ஜீவாவின் கோபத்திற்கு காரணம் கண்ணன் தான் என்று எல்லோரும் அவரை திட்டுகிறார்கள். இதற்கு மூல காரணம் கண்ணன் என்று சொல்லும்போது ஐஸ்வர்யாவுக்கு கோபம் வந்து கண்டபடி பேசுகிறார்.

அப்போது இதுவரை வாயவே திறக்காத முல்லை, நடுவில் புகுந்து கண்ணனுக்கு 40 ஆயிரம் சம்பளம் அதில் பாதியை தான் வீட்டுக்கு கொடுக்கிறார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். அந்தச் சமயத்தில் துணுக்காக பேசும் ஐஸ்வர்யா மொத்த சம்பளத்தையும் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றுக்கும் உங்களிடம் கைநீட்டி நிக்கணுமா என கேட்கிறார்.

Als0 Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம் கட்டி வரும் ஜீ தமிழ்

மேலும் இந்த வீட்டில இப்போதும் கஷ்டப்பட்டு தான் இருக்குமோ என்று ஐஸ்வர்யா கூறுகிறார். உடனே மூர்த்தி அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு யாரு இருக்க வேணாம் என்று சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா நான் மட்டும் இந்த வீட்டை விட்டு போகணுமா இல்ல கண்ணனுமா என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.

முதலில் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து பிரிந்த நிலையில் இப்போது கண்ணனும் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். இதனால் மூர்த்தி நிலைகுலைந்து போய் உள்ளார். அதுமட்டும்இன்றி அவருக்கு பக்கபலமாக கதிர் மட்டும் துணை நிற்கிறார்.

Als0 Read : விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

- Advertisement -

Trending News