செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிரபல நடிகைக்கு பதிலாக சீரியலில் நடிக்கும் ரேஷ்மா.. இருந்தாலும் அவங்க அளவுக்கு வருவார்களானு தெரியல?

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சேனல்களில் விஜய் டிவியும் மக்கள் மத்தியில் மிகப்பிரபலம். இதற்கு காரணம் இவர்கள் வரிசைபடுத்தி ஒளிபரப்பும் டிவி சீரியல்களும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களும் தான்.

கனா காணும் காலங்கள் துவங்கி இப்போது ஒளிபரப்பாகும் பல்வேறு நாடகங்கள் வரை விஜய் டிவியின் சீரியல்கள் தனி ரகம் தான். சீரியல்களில் சிக்ஸர் அடிக்கும் சன் நெட்வொர்கை சாப்பிட்டு அசை போட வைத்தது விஜய் டிவியை.

விஜய் டிவி அறிமுகம் எனில் அன்றிலிருந்து வாழ்வு நரிமுகம் தான் எப்போதும் ஏறுமுகம் தான். இப்படியாக விஜய் டிவியில் பிரபலமான ஒரு சீரியல் தான் “பாக்யலட்சுமி”. இந்த சீரியலின் ராதிகா என்கிற கதாப்பாத்திரத்தில் நடிகை ஜெனி என்கிற ஜெனிபர் நடித்து வந்தார்.

jennifer
jennifer

ஜெனி சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்தாலும் குரூப் டான்சராக வந்தாலும் வெள்ளித்திரை அவரின் வாழ்வை மேம்படுத்தவில்லை. சின்னத்திரையில் சிறு துடுப்பாக நுழைந்தாலும் சிக்ஸர் மழைகளில் லீட் ரோல்கள் சிக்கின.

பாக்யலட்சுமி தொடரின் புதிய ப்ரோமேவில் ஜெனிக்கு பதிலாக பிகபாஸ்-3 வது சீசன் நடிகை “ரேஷ்மா” வந்திருந்தார். இவருக்கு பதில் இனி இவர் என்கிற முறையில் மாற்றப்பட்டிருந்தது ராதிகா என்கிற ரோல்.

இது தொடர்பாக ஏராளமான ரசிகர்கள் ஜெனிபரின் இண்ஸ்டா பக்கத்தில் கமாண்டுகளை அள்ளித்தெளித்தும் ஜெனியின் தரப்பிலிருந்து நோ ரிப்ளே.

- Advertisement -

Trending News