வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட போகும் ஜீவானந்தம்.. ஏமாந்து நிற்கும் குணசேகரன் ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது ஜீவானந்தம் வந்த பிறகு கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ஆனாலும் இவர் நல்லவரா கெட்டவரா என்ற சந்தேகம் இருந்தாலும் இவர் பேசின பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் இவருடைய கேரக்டர் இருக்கிறது. இருந்தாலும் அப்பத்தா ஏன் இவருடைய பெயரை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அப்படி என்றால் இவரால் ஏதோ ஒரு நல்லது நடக்கும் என்ற ஒரு விஷயம் இருப்பதினால் தான். ஆனால் ஜனனி போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் ஜீவானந்தம் அவருடைய அசிஸ்டன்ட் கிட்ட பட்டம்மா சம்பந்தமான எந்த போன் வந்தாலும் நீங்க எடுக்க வேண்டாம் அப்படியே கட் பண்ணி விடுங்கள் என்று சொல்கிறார்.

Also read: மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

இதை பார்க்கும் பொழுது எந்த மாதிரியான விஷயங்களை இவர் கொண்டு வருகிறார் என்று புரியாத புதிராக இருக்கிறது. அட்லீஸ்ட் இப்பவாவது ஆதிரை திருமணம் நடக்குமா இல்லையா? ஒன்னு கரிகாலன் கூட கல்யாணத்தை முடிச்சிடுங்க இல்லையென்றால் அருண் கூட சேர்த்து விடுங்கள். தயவு செய்து மறுபடியும் ஆதிரை திருமணத்தை வைத்து மட்டும் கதையை ஓட்டாமல் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

பொதுவாய் மற்ற சீரியல்களில் ஹீரோ ஹீரோயின் திருமணம் தான் ஜவ்வு மாதிரி பரபரப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இழுத்துக் கொண்டே போவார்கள். ஆனால் இதில் ஏன் தேவையில்லாமல் ஆதிரை ட்ராக் ஓட்டிட்டு போகிறார்கள் என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு ஆதிரை ஓர்த்து இல்லை.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

இருந்தாலும் ஜனனி பிளான் பண்ண படி ஆதிரை அருண் திருமணம் கண்டிப்பாக நடைபெறும். ஆனால் அதில் ஜீவானந்தம் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அனைவரும் ஷாக் ஆகின்ற மாதிரி ஒரு விஷயம் பண்ணப்போகிறார். அதாவது அந்த அப்பத்தாவின் 40% ஷேர் குணசேகரனுக்கும் இல்லாமல் அப்பத்தாவிற்கும் இல்லாமல் இடையில் ஆட்டைய போடப் போவது ஜீவானந்தமாக தான் இருக்கப் போகிறார்.

ஏற்கனவே இவருடைய கேரக்டர் படி பணக்காரர்களிடம் இருக்கும் சொத்தை அபகரித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது தான். அப்படி என்றால் இவரை நம்பி அப்பத்தா கொடுத்திருந்த பொறுப்பை சரியாக பயன்படுத்தப் போகிறாரா அல்லது இவர் அதை யூஸ் பண்ண போகிறாரா என்பது தான் மிகப்பெரிய திருப்பமாக வரப்போகிறது.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

- Advertisement -

Trending News