குணசேகரன் போட்ட டிராமாவில் பலிகடாக சிக்கிய ஜீவானந்தம்.. ஒரு வழியா வீடு வந்து சேர்ந்த தர்ஷினி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் வக்கிர புத்தியால் பெத்த மகள் என்று கூட பாராமல் தர்ஷினியை கடத்தி வைத்து சித்தரவதை செய்து வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஒரு விஷயத்தை வைத்து நாடகத்தை உருட்டி வந்தார்கள். அந்த வகையில் தற்போது இதற்கு முடிவு கட்டும் விதமாக ஒரு வழியாக தர்ஷினி வீடு வந்து சேர்ந்து விட்டார்.

அதுவும் ஐபிஎஸ் அதிகாரி குற்றவை மூலம் தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அதாவது தர்ஷினியை காப்பாற்ற போன ஜீவானந்தத்தை குணசேகரன் பிளான் பண்ண படி இவருடைய ஆட்கள் குத்தி விட்டார்கள்.

ஆனாலும் ஜீவானந்தம் அந்த ஆட்களிடம் போராடி தர்ஷினியை பாதுகாப்பாக தூக்கிட்டு வந்து குற்றவை கண்ணில் படும் மாதிரி போட்டு விட்டார்.

பிறகு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் ஜீவானந்தம் உயிரை கைல பிடித்துக் கொண்டு தலைமறைவாக போய்விட்டார். அத்துடன் இது அனைத்திற்கும் காரணம் ஜீவானந்தம் தான் என்று போலீஸ் நினைத்து பார்த்ததும் ஷூட்டிங் கொடுக்க வேண்டும் என்று மேல் அதிகாரியிடம் இருந்து ஆர்டரை வாங்கிக் கொண்டார்கள். இதைத் தெரிந்த ஜீவானந்தம் இவர்கள் கண்ணில் சிக்கி விடக்கூடாது என்று போய்விட்டார்.

குணசேகரன் போடும் டிராமா

இதனை அடுத்து தர்ஷினி பாதுகாப்பாக வந்து விட்டார் என்ற செய்தி குணசேகரனுக்கு தெரிய வருகிறது. உடனே வீட்டில் வைத்து என்னுடைய பொண்ணு கண்டுபிடிச்சாச்சு என்ற சந்தோசத்தில் ஒரு டிராமாவை போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு போகிறார். போனதும் பாசமாக இருக்கும் டிராமாவை போட்டு அனைவரையும் நம்ப வைக்கிறார்.

அத்துடன் இதற்கு காரணம் அந்த ஜீவானந்தம் தான். அவனை உயிரோடு விட்டு விடாதீர்கள் என்று பயத்தில் உளறி வருகிறார். ஏனென்றால் ஜீவானந்தம் வந்துவிட்டால் அவர் மூலம் எங்கே நாம் மாட்டி விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது. ஆனால் உண்மையில் குணசேகரன் தான் தன்னை கடத்தி வைத்திருந்தார் என்பது தர்ஷினிக்கு ஏற்கனவே தெரியும்.

ஆனால் அடிக்கடி அவருடைய உடம்புக்கு மயக்கம் மருந்து கொடுத்து வந்ததால் சில விஷயங்கள் அவருடைய நினைவுக்கு வர முடியாமல் போய்விட்டது. இதனால் இப்பொழுது வரை குணசேகரன் தப்பித்துக் கொண்டு வருகிறார்.

ஆனால் நிச்சயமாக தர்ஷினி முழுமையாக குணமானதும் குணசேகரன் முகத்திரையை கிழித்து காட்டுவார். அத்துடன் ஜீவானந்தம் மீது எந்த தவறும் இல்லை என்கிற விஷயமும் அனைவருக்கும் தெரியவரும்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை