வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நந்தினியால் குணசேகரனை கடித்து குதறிய கதிர்.. ஜீவானந்தத்தின் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களை முன்வைத்து நகர்ந்து வருகிறது. இதில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி, குணசேகரனின் வஞ்சகத்தால் உயிர் பிரிந்து விட்டது. இந்த அழகான கூட்டை சிதைத்து விட்டு கதிர் இன்னும் அடங்காமல் ஜீவானந்தத்தை காலி பண்ண வேண்டும் என்று துடித்து வருகிறார்.

அடுத்ததாக ஜீவானந்தத்தின் முக்கால்வாசி கதையே கேட்ட ஜனனி மனகஷ்டத்துடன் ஊருக்கு
திரும்பி வருகிறார். அதை நேரத்தில் கதிர், குணசேகருக்கு போன் பண்ணி அங்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அத்துடன் ஜனனி அங்கே உள்ளே நுழைந்ததால் பாதி விஷயம் அவளால் கெட்டுப் போய்விட்டது என்றும் சொல்கிறார். உடனே குணசேகரன் அங்கே எப்படி ஜனனி வந்தால் என்று கேட்கிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

அடுத்தபடியாக கதிர் வீட்டுக்கு வந்ததும் நந்தினி வாசலில் நின்று உங்க அண்ணன் இந்த மாதிரி எல்லாம் பேசினாரு, உனக்கு கஷ்டமா இருக்கோ இல்லையோ, எனக்கு வலிக்குது என்று சொல்கிறார். இதை கேட்டதும் கதிர், குணசேகரன் இடம் ஏன் அப்படி சொன்னீங்க என்று கோபமாக கேட்கிறார்.

இவர் இப்படி கேட்டதும் குணசேகரன் அதிர்ச்சியில் நிற்கிறார். ஆனால் கதிர் உண்மையில் அண்ணனிடம் இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடிய ஆளும் கிடையாது. அவ்வளவு சீக்கிரம் திருந்தற ஜென்மமும் இல்ல. இது சும்மா இவருடைய நாடகமாக தான் இருக்கும். நந்தினி கதிரை நினைத்து ஏமாறப்போகிறார்.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

அதாவது குணசேகரனை கூட சில விஷயத்தில் நம்பி விடலாம், ஆனால் இவரை விட டபுள் மடங்கு மோசமானவர்தான் கதிர். அதனால் இவர் இப்போதைக்கு திருந்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதே நேரத்தில் குணசேகரனுக்கு எல்லா விதத்திலும் சப்போட்டாக இருப்பவர் கதிர் மட்டும்தான். இவரும் திருந்திவிட்டால் இந்த நாடகத்தின் விறுவிறுப்பு குறைந்து விடும்.

அதனால் கடைசி வரை கதிர் திருந்த போவதே இல்லை. மேலும் அடிபட்ட பாம்பாக மனவேதனையில் தத்தளித்து கொண்டிருக்கிறார் ஜீவானந்தம். அத்துடன் இவருடைய மகளையும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள நபராக தைரியமான பெண்ணாக வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். அத்துடன் மனைவி யாரால் தாக்கப்பட்டார் என்ற உண்மையை கண்டுபிடித்து அவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இனி தான் ஜீவானந்தத்தின் உண்மையான ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

- Advertisement -

Trending News