வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குணசேகரனின் வக்கிர புத்தியால் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஜீவானந்தம்.. ஞான சூனியத்துக்கு புத்தி சொல்லிய முட்டாள் பீஸ்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் இந்த அளவுக்கு மூளையை யூஸ் பண்ணி வக்கிர புத்தியால் ஜீவானந்தத்தை மாட்டி விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கச்சிதமாக ஒவ்வொன்றையும் பிளான் பண்ணி சிம்கார்டு ஜீவானந்தம் பெயரில் வாங்கி அனைவரிடமும் கொடுத்து தந்திரமாக போலீஸிடம் சிக்க வைத்து விட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி ஜீவானந்தம், தர்ஷினியை காப்பாற்றி காட்டு வழியாக கூட்டுப் போகும்பொழுது அந்த சிசிடிவி புட்டேஜ் பார்த்த போலீசார் முழுக்க முழுக்க இதற்கு காரணம் ஜீவானந்தம் தான் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் ஜீவானந்தத்தை பார்த்ததும் ஷூட் பண்ணி தர்ஷினையை காப்பாற்றுவதற்கு ஷூட்டிங் ஆடரும் வாங்கிக் கொண்டார்கள்.

இது தெரியாத ஜீவானந்தம், தர்ஷினியே போலீஸிடம் ஒப்படைப்பதற்கு காரில் கூட்டி வருகிறார். அந்த நேரத்தில் ஜீவானந்தத்திற்கு மறைமுகமாக ஒரு போலீஸ் போன் பண்ணி தர்ஷினி உங்களிடம் இருக்கும் வரை தான் உங்களுக்கு பாதுகாப்பு. அதனால் தர்ஷினியே போலீஸிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதை கேட்ட ஜீவானந்தம் தர்ஷினியை போலீஸிடம் ஒப்படைக்காமல் காரில் அப்படியே கூட்டிப் போய் விடுகிறார்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

உடனே இவர்களை பாலோ பண்ணி போலீசாரும் போகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லா பிரச்சனைக்கும் ஜீவானந்தம் தான் காரணம் என்று நாலா பக்கமும் ஜோடித்து விட்டார் குணசேகரன். இது என்னடா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை என்பதற்கேற்ப ஏற்கனவே மாரிமுத்து இல்லாததால் நாடகம் தடுமாறி போய்விட்டது. தற்போது தர்ஷினியின் கடத்தல் விஷயமும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி வருகிறது.

போதாக்குறைக்கு ஒற்றுமையாய் இருந்த ரேணுகா மற்றும் நந்தினி தற்போது ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ஞானத்துக்கு கொஞ்சம் கூட அறிவில்லாமல் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவிற்கு அறிவில்லாமல் சண்டையை பெருசாக்கி வருகிறார். கடைசியில் ஞானத்துக்கும் கதிருக்கும் அட்வைஸ் பண்ணும் அளவிற்கு இதுவரை முட்டாள் பீஸ் ஆக இருந்த கரிகாலன் நச்சு என்று பதிலடி கொடுத்தார்.

இனிமேலாவது இந்த ஞானம் திருந்தி ஒழுங்கு மரியாதையாக இருந்தால் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கும். இதனை அடுத்து குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஓவராக அராஜகம் பண்ணி ஜீவானந்தத்தின் மீதுதான் அனைத்து குற்றச்சாட்டுகளும் இருக்கிறது என்பதற்கு ஏற்ப கதையை அப்படியே திசை திருப்பி விட்டார். அத்துடன் ஜனனியை கூட்டிட்டு போவதற்காக சக்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். கடைசியில் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத அளவிற்கு நல்லவனாக நடிக்கிறார் குணசேகரன்.

Also read: கதிரை உருகி உருகி காதலிக்கும் ராஜி.. பாண்டியனின் மூத்த மகன் வாழ்க்கையில் கும்மி அடித்த மச்சான்கள்

- Advertisement -

Trending News